பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் வரை போராட்டம் தொடரும்: ஜாக்டோ ஜியோ அறிவிப்பு

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் வரை போராட்டம் தொடரும் என இரண்டாவது நாளாக மறியலில் ஈடுபட்ட ஜாக்டோ
கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை சேப்பாக்கத்தில் இரண்டாவது நாளாக வியாழக்கிழமை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள். 
கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை சேப்பாக்கத்தில் இரண்டாவது நாளாக வியாழக்கிழமை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள். 
Updated on
1 min read

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் வரை போராட்டம் தொடரும் என இரண்டாவது நாளாக மறியலில் ஈடுபட்ட ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் தெரிவித்தனர். 
அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது; இடைநிலை ஆசிரியர்கள், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைத்துப் பிரிவினருக்கும் ஊதிய முரண்பாடுகளைக் களைவது ஆகியவை உள்பட நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், 
ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ சார்பில் சென்னை சேப்பாக்கத்தில் புதன்கிழமை முதல் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. முதல்நாளில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் கைது செய்யப்பட்டு எழும்பூரில் உள்ள விளையாட்டு மைதானத்தில் தங்க வைக்கப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர். 
இதைத் தொடர்ந்து ஏற்கெனவே அறிவித்தபடி இரண்டாவது நாளாக சேப்பாக்கத்தில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் மறியல் போராட்டத்தை தொடர்ந்தனர். வெயிலையும் பொருட்படுத்தாமல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர். 
பலரும் சாலையில் அமர்ந்தபடி கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். 
பேச்சுவார்த்தைக்கு அரசு அழைக்கும் வரை போராட்டத்தை தொடர்வது என்றும், போராட்டத்தில் ஈடுபடுவோரின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கவும் முடிவு செய்துள்ளோம் என்று ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் மு.சுப்பிரமணியன், இரா.தாஸ், கு.தியாகராஜன் ஆகியோர் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com