ஏர்செல் சேவை முடக்கம்: பி.எஸ்.என்.எல். மையங்களில் குவிந்த வாடிக்கையாளர்கள்
முன்னணி தனியார் தொலை தொடர்பு நிறுவனமான ஏர்செல் சேவை இரண்டாவது நாளாக முடங்கியதால், பி.எஸ்.என்.எல். சேவையை மாற்றி, பயன்படுத்த சென்னையில் உள்ள சேவை மையங்களுக்கு சுமார்


முன்னணி தனியார் தொலை தொடர்பு நிறுவனமான ஏர்செல் சேவை இரண்டாவது நாளாக முடங்கியதால், பி.எஸ்.என்.எல். சேவையை மாற்றி, பயன்படுத்த சென்னையில் உள்ள சேவை மையங்களுக்கு சுமார் 5,000 பேர் வியாழக்கிழமை குவிந்தனர்.
நிதி தொடர்பான பிரச்னை காரணமாக, முன்னணி தனியார் தொலைதொடர்பு சேவை அளிக்கும் ஏர்செல் நிறுவனத்தின் சேவை தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கடந்த இரண்டு நாள்களாக முடங்கியுள்ளது.
இதையடுத்து தங்களது சேவையை பி.எஸ்.என்.எல்.க்கு மாற்றிக்கொள்ள முனைப்பு காட்டினர். இதனால், சென்னையில் உள்ள பி.எஸ்.என்.எல்.க்கு சொந்தமான 42 சேவை மையங்களில் வியாழக்கிழமை காலை முதலே மக்கள் குவியத் தொடங்கினர்.
இந்த மையங்களுக்கு வியாழக்கிழமை காலை முதல் மாலை வரை சுமார் 5,000 பேர் வந்திருந்தனர். இவர்களில் ஆயிரம் பேருக்கு பி.எஸ்.என்.எல். சேவைக்கு மாற்றிக் கொடுக்கப்பட்டது.
இதுகுறித்து பி.எஸ்.என்.எல். சென்னை பிரிவு அதிகாரிகள் கூறியது:
எங்களின் மையங்களில் வாடிக்கையாளர்கள் குவிந்து, தங்கள் சேவையை மாற்ற விண்ணப்பித்தனர். ஆனால், அவர்கள் பயன்படுத்தும் சேவை நிறுவனத்தின் சிக்னல் இல்லாததால், அதிலிருந்து பி.எஸ்.என்.எல்.க்கு மாற்ற முடியவில்லை. ஆனாலும், சில வாடிக்கையாளர்கள் சிக்னல் உள்ள இடங்களில் இருந்து அவர்கள் பயன்படுத்திய சேவை நிறுவனத்துக்கு சேவை மாற்றுவது தொடர்பாக வேண்டுகோள் விடுத்தனர். இருப்பினும், அந்த நிறுவனத்தில் இருந்து யுபிசி கோடு எண் வராததால், சேவையை மாற்ற முடியவில்லை.
இதையடுத்து, அவர்களின் பெயர், தொலைபேசி எண், இணையதள முகவரி ஆகியவை பெற்று அனுப்பி வைத்துள்ளோம். சேவையை எப்படி மாற்றிக்கொள்ளலாம் என்பது வாடிக்கையாளர்களுக்கு தெரியவில்லை.
தாங்கள் பயன்படுத்தும் தொலை தொடர்பு சேவையை மாற்றுவதற்கு போர்ட் ல்ர்ழ்ற் என்று டைப் செய்து, இடைவெளி விட்டு பயன்படுத்தும் தொலைபேசி எண்ணை குறிப்பிட்டு, 1900 எண்ணுக்கு அனுப்பி வைக்க வேண்டும். அடுத்த சில நிமிடங்களில் யுபிசி என்ற கோடு வரும். இந்த எண்ணை பெற்று, ஆதார் மற்றும் முகவரியுடன் வந்தால், பி.எஸ்.என்.எல். மையத்துக்கு சென்றால் எங்கள் சேவை மாற்றி வழங்கப்படும் என்றனர் அவர்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...