காவிரி விவகாரம் குறித்து விவாதிக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் வியாழக்கிழமை காலை 10:30 மணியளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் பத்தாவது தளத்தில் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் துரைமுருகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, முத்தரசன், பாலகிருஷ்ணன், விசிக தலைவர் திருமாவளவன், சீமான், ஜி.கே.வாசன், கி.வீரமணி, ஜி.கே.மணி, சரத்குமார், செ.கு.தமிழரசன், தமிமுன் அன்சாரி, வேல்முருகன், கிருஷ்ணசாமி, தனியரசு, ஈஸ்வரன் உட்பட மொத்தம் 30 அரசியல் கட்சிகள், 9 அரசியல் அமைப்புகள், 54 விவசாய அமைப்புகள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
இக்கூட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பேசியதாவது:
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு விரைவில் ஒப்புதல் அளிக்கவுள்ளது. அடுத்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பான ஒப்புதல் அளிக்க வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தலைக்கு மேல் தொங்கிய கத்தி கழுத்துக்கு வந்துவிட்டது: தொகுதி மறுவரையறை குறித்து முதல்வர்!

தொகுதி மறுவரையறை! முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை!

சென்னையில் இன்றும் நாளையும் வெய்யில் 100 டிகிரியைத் தாண்டும்! மற்ற மாவட்டங்களில்?

டிசிஎஸ் நாசிக் அலுவலக விவகாரம்! நான்காண்டுகளில் நடந்தது என்ன?
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு


