ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

தமிழக - கர்நாடக எல்லையில் நக்ஸல் தடுப்பு போலீஸார் சோதனை

தமிழத்துக்கு பாரத பிரதமர் நரேந்திர மோடி, பிப்.25-ஆம் தேதி வருகை தர உள்ள நிலையில், தமிழ்நாடு, கர்நாடக மாநில எல்லையில் நக்ஸல் தடுப்பு போலீஸார் தீவிர தேடுதல் வேட்டைகளில் ஈடுபட்டுள்ளனர்.

News image
Updated On :22 பிப்ரவரி 2018, 8:08 pm

DIN

தமிழத்துக்கு பாரத பிரதமர் நரேந்திர மோடி, பிப்.25-ஆம் தேதி வருகை தர உள்ள நிலையில், தமிழ்நாடு, கர்நாடக மாநில எல்லையில் நக்ஸல் தடுப்பு போலீஸார் தீவிர தேடுதல் வேட்டைகளில் ஈடுபட்டுள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி, பிப். 25-ஆம் தேதி தமிழகத்துக்கு வரவுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கையாக கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.மகேஷ்குமார் உத்தரவின்பேரில், சிறப்பு அதிரடிப்படை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மோகன் நிவாஸ் மேற்பார்வையில், நாசவேலை தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளர் ரவி தலைமையில் உதவி காவல் ஆய்வாளர்கள் ராஜி, வாசுதேவன் உள்ளிட்ட போலீஸார் தமிழக, கர்நாடக மாநில எல்லைகளில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம், பேரிகை காவல் நிலையத்துக்குள்பட்ட சின்னாரன்தொட்டி, ஏகல்குண்டு, செம்மறியாடுபாறை, எறும்புகோம்பை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நக்ஸல் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 
மேலும், அன்னியர்களின் நடமாட்டம் இருந்தால், அதுகுறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கும்படி பொதுமக்களைக் கேட்டுக் கொண்டனர். மேலும், இதுபோன்ற தேடுதல் வேட்டைகள் தொடர்ந்து நடைபெறும் என காவல் துறையினர் தெரிவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.