மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

திமுக மாநாட்டில் பங்கேற்க ராகுல், கேஜரிவாலுக்கு அழைப்பு

திமுக சார்பில் ஆகஸ்ட் 30-ஆம் தேதி நடைபெறவுள்ள மாநில சுயாட்சி, கூட்டாட்சி ஆதரவு மாநாட்டில் பங்கேற்க வறுமாறு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால்

News image

மாநாட்டு அழைப்புக் கடிதத்தை தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலிடம் திங்கள்கிழமை அளிக்கிறார் மாநிலங்களவை திமுக உறுப்பினர் திருச்சி சிவா.

Updated On :9 ஜூலை 2018, 8:02 pm

திமுக சார்பில் ஆகஸ்ட் 30-ஆம் தேதி நடைபெறவுள்ள மாநில சுயாட்சி, கூட்டாட்சி ஆதரவு மாநாட்டில் பங்கேற்க வறுமாறு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் சுதாகர் ரெட்டி ஆகியோருக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது.
இது தொடர்பாக திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் எழுதிய கடிதத்தை தில்லியில் மாநிலங்களவை திமுக உறுப்பினர் திருச்சி சிவாஅவர்களுக்கு அளித்து மாநாட்டில் பங்கேற்குமாறு கேட்டுக்கொண்டார்.
இதுதொடர்பாக திருச்சி சிவா செய்தியாளர்களிடம் கூறுகையில், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தந்த அழைப்புக் கடிதத்தை தில்லி முதல்வர் கேஜரிவால், இந்திய கம்யூனிஸ்ட் சட்சியின் பொதுச் செயலர் சுதாகர் ரெட்டி ஆகியோரை தில்லியில் நேரில் சந்தித்து அளித்தேன். அவர்கள் இருவரும் மாநாட்டில் பங்கேற்பதாக உறுதியளித்தனர். 
கேஜரிவாலுடனான சந்திப்பின்போது மாநில ஆளுநர்களின் அணுகுமுறையால் கூட்டாட்சி தத்துவத்திற்கு எந்த அளவுக்கு சோதனை வந்துள்ளது என்பது குறித்து பரஸ்பரம் கருத்துகளை பகிர்ந்துகொண்டோம். ராகுல் காந்தியை திங்கள்கிழமை மாலையில்அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து மாநாட்டுக்கு வருமாறு அழைப்புக் கடிதம் கொடுத்தேன். மாநாடு நடைபெறும் தேதியில் தமக்கு வேறு சுற்றுப்பயணம் உள்ளதாகவும், கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தியை திமுக மாநாட்டில் பங்கேற்பதற்கான ஏற்பாடுகளை செய்வதாக உறுதி கூறியுள்ளார்.
அரசியல் சட்டத்தில் கூட்டாட்சித் தத்துவதற்திற்கு உள்ள முக்கியத்துவத்தை மத்தியில்ஆளும் பாஜக அரசு மீறி மாநில உரிமைகளில் தலையிட்டு, ஆக்கிரமித்து வருகிறது. மாநிலங்கள் என்பவை மனித உடலின் உறுப்புகள் போன்றவை அவற்றை ஊனப்படுத்திவிட்டு, சிதைத்துவிட்டு ஒரு மனிதன் இயங்க முடியாது. மாநில சுயாட்சி கோரிக்கைக்கு மீண்டும் வலிமை ஏற்படுத்திடவும், இந்த நாடு கூட்டாட்சி தத்துவத்தில் உருவானது என்பதை நிலைநிறுத்தவும் இந்த மாநாடு அவசியமாகும்' என்றார். திருச்சி சிவா அளித்த அழைப்புக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
அரசு அமைக்க அழைத்தல், மாநில பல்கலைக்கழகங்களில் நியமனம், மாநில அரசுகளின் அன்றாட செயல்பாடுகளில் குறுக்கீடு ஆகியவற்றில் குறிப்பாக பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களில் மாநில ஆளுநர்கள் மூலம் இதுபோன்ற அரசியல் பாரபட்சமான செயல்பாடுகள் அரங்கேறி வருகின்றன. 
நாட்டின் கூட்டாட்சி கட்டமைப்பு விவகாரத்தில் கடந்த 40 ஆண்டுகளாக எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. மாநில சுயாட்சி உரிமைகள் தொடர்ந்து பறிக்கப்பட்டு, அரசியலமைப்பு நெருக்கடிக்குள் மாநிலங்களை தள்ளும் சூழல் உருவாகி வருகிறது.
இதுபோன்ற சூழலில், மாநிலங்களின் உரிமைகள், கூட்டாட்சிக் கொள்கைகள் ஆகியவற்றை பாதுகாக்க ஒத்த கருத்துள்ள அரசியல் கட்சிகள் சேர்ந்து ஒரு தளத்தை உருவாக்க வேண்டியுள்ளது. இதன் ஒரு பகுதியாக திமுக சார்பில் மாநில சுயாட்சி, கூட்டாட்சி ஆதரவு மாநாடு ஆகஸ்ட் 30-ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.