தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்: சிபிஐ விசாரணையை எதிர்ப்பது ஏன்?: உயர் நீதிமன்றம்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்த வழக்கை சிபிஐ விசாரிக்க எதிர்ப்புத் தெரிவிப்பது ஏன் எனக் கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்றம், சம்பவம் தொடர்பான

News image
Updated On :10 ஜூலை 2018, 5:18 am

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்த வழக்கை சிபிஐ விசாரிக்க எதிர்ப்புத் தெரிவிப்பது ஏன் எனக் கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்றம், சம்பவம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. 
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராட்டம் நடத்திய பொது மக்கள் மீது காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியாகினர். இந்தச் சம்பவம் குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குரைஞர்கள், சீமான், தொல்.திருமாவளவன் உள்ளிட்டோர் வழக்குத் தொடர்ந்துள்ளனர். இதே போன்று உயர் நீதிமன்ற மதுரை கிளையில் 15-க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
தலைமை நீதிபதி கேள்வி: இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி மற்றும் நீதிபதி பி.டி.ஆஷா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, இந்தச் சம்பவத்தில் போலீஸ் அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. எனவே, ஒரு தனிப்பட்ட அமைப்பு விசாரித்தால்தான் விசாரணை நேர்மையாக நடைபெறும். இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறீர்கள்?
குட்கா விவகாரத்தில் போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் இருந்ததால் அந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிடப்பட்டது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தொலைக்காட்சியில் பார்த்தேன். இந்தச் சம்பவத்தில் போலீஸார், அரசியல்வாதிகள் யார் சம்பந்தப்பட்டிருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்தான்'' என்றார் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி.
இழப்பீட்டை ரூ.1 கோடியாக: மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர்கள் சங்கரசுப்பு, சூரியப்பிரகாசம், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிடவும், பலியானவர்களின் உடற்கூறு ஆய்வறிக்கை இதுவரை வழங்கப்படவில்லை என்றும், இழப்பீட்டுத் தொகையை ரூ.1 கோடியாக உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் வாதிட்டனர்.
விடியோ ஆதாரம் உள்ளது-அரசு: அரசு தலைமை வழக்குரைஞர் விஜய் நாராயண் செய்த வாதம்: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக 20 நிமிஷங்கள் ஓடக்கூடிய விடியோ ஆதாரம் உள்ளது. அதை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும். விடியோ ஆதாரங்களைப் பார்க்காமல் இந்த வழக்கில் எந்த உத்தரவையும் நீதிமன்றம் பிறப்பிக்கக் கூடாது'' என வாதிட்டார்.
ஜூலை 30-ஆம் தேதிக்குள்...இந்த வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் வரும் ஜூலை 30-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், உடற்கூறு ஆய்வறிக்கை கிடைக்காத, பலியானவர்களின் உறவினர்கள் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதியை அணுகி பெற்றுக் கொள்ள வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.