சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

7 மாத குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற தந்தை நண்பருடன் கைது

மதுரை மாவட்டம் சோழவந்தானில் 7 மாத குழந்தையை கழுத்தை நெரித்து கொன்ற தந்தை நண்பருடன் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார்.

News image
Updated On :9 ஜூலை 2018, 2:29 am

தினமணி

மதுரை மாவட்டம் சோழவந்தானில் 7 மாத குழந்தையை கழுத்தை நெரித்து கொன்ற தந்தை நண்பருடன் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார்.
சோழவந்தான் சப்பாணி கோயில் தெருவைச் சேர்ந்த அஜித்குமார் (21).  இவரது மனைவி பாண்டிச்செல்வி (20). இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களது 7 மாத ஆண் குழந்தை (கிஷோர்). இந்நிலையில், கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதில் கடந்த 4 மாதங்களாக பெற்றோர் வீட்டிலிருந்த பாண்டிச்செல்வியை 4 நாள்களுக்கு முன்பு அஜித்குமார் வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை மாலை அஜித்குமார் தனது நண்பர் தவமணியுடன் குழந்தை கிஷோரை அழைத்துக் கொண்டு வீட்டு மாடிக்கு சென்றுள்ளார். சிறிது நேரத்தில் குழந்தை மயங்கி விழுந்து விட்டதாக மனைவியிடம் கூறியுள்ளார்.
உடனே பாண்டிச்செல்வி குழந்தையை சோழவந்தான் அரசு மருத்துவமனைக்கு தூக்கிக் கொண்டு சென்றார். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தனர். இதுதொடர்பாக பாண்டிச்செல்வி அளித்த புகாரின் பேரில் சோழவந்தான் போலீஸார் அஜித்குமார், தவமணி இருவரையும் அழைத்து விசாரித்தனர். அப்போது மனைவி மீது உள்ள ஆத்திரத்தில் குழந்தையை தனது நண்பர் தவமணி உதவியுடன் கொலை செய்ததாக அஜித்குமார் ஒப்புக்கொண்டார். இதையடுத்து இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.