மதுரை தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தை திருவனந்தபுரம், சென்னையைச் சேர்ந்த மத்திய மருத்துவ கட்டுமானக் குழுவினர் (எச்.எல்.எல்) திங்கள்கிழமை ஆய்வு செய்தனர்.
தோப்பூர் கோ.புதுப்பட்டியில் 198.27 ஏக்கர் பரப்பளவில் ரூ.1500 கோடி மதிப்பீட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது. இங்கு திருவனந்தபுரம், சென்னை ஆகிய பகுதிகளில் இருந்து மத்திய கட்டுமான குழுவினர் மருத்துவமனை அமைய உள்ள நிலப்பரப்பை முழுவதுமாக சுற்றிப்பார்த்தனர்.
அப்போது, கட்டடம் அமையவுள்ள மண்ணின் தன்மை, நிலத்தடி நீர்மட்டம் எவ்வளவு, குடிநீர் வசதி, மின்சாரம், சுற்றுச்சூழல் உள்ளிட்டவைகள் குறித்தும் 7 பேர் கொண்ட குழுவினர் ஆய்வு செய்தனர். இதைத்தொடர்ந்து மதுரை அரசு மருத்துவமனை முதன்மையர் மருதுபாண்டியன் செய்தியாளர்களிடம் கூறியது:
மத்திய மருத்துவ கட்டுமானக் குழுவினர் இங்குள்ள வசதிகள் குறித்தும், மண்ணின் தன்மை குறித்தும் 3 நாள்களில் மத்திய அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க உள்ளனர். அதன் பின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இதே நிறுவனம்தான் மதுரையில் உள்ள பல்நோக்கு அரசு மருத்துவமனையின் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டனர் என்றார்.
ஆய்வின்போது, மதுரை வருவாய் கோட்டாட்சியர் அரவிந்தன், வட்டாட்சியர் சுரேஷ், பொதுப்பணித் துறை உதவி நிர்வாகப் பொறியாளர் செல்வராஜன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆம் ஆத்மி எம்.பி. தொடா்புடைய கல்வி நிறுவனங்களில் அமலாக்கத் துறை திடீா் சோதனை: அரவிந்த் கேஜரிவால் கண்டனம்

சேலம் வந்த முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு

தொகுதி மறுசீரமைப்பால் தமிழ்நாட்டை ஆபத்து சூழ்ந்துள்ளது: சேலத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பேச்சு

வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு தமிழகம் முழுவதும் பயிற்சி
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


