சுற்றுச்சூழல் பாதுகாப்பு, ஆற்றல் மேலாண்மை ஆகியவற்றின்கீழ் அமைக்கப்பட்டுள்ள, சென்னை மெட்ரோ ரயில் தலைமை அலுவலக கட்டடத்துக்கு அமெரிக்க நிறுவனம் விருது வழங்கி கெளரவித்துள்ளது.
சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், கட்டப்படும் கட்டடங்களுக்கு யு.எஸ்.கிரீன் பில்டிங் கவுன்சில்' என்ற அமெரிக்க நிறுவனம் சான்றிதழ் வழங்கி சிறப்பித்து வருகிறது. அதன்படி, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலான கட்டுமானம், குறைந்த செலவில் கட்டப்பட்ட கட்டடங்கள் கண்டறியப்பட்டு எல்.இ.இ.டி சான்றிதழை இந்நிறுவனம் வழங்கி வருகிறது.
இந்நிலையில், புதிய கட்டுமானப் பிரிவின்கீழ், சென்னை மெட்ரோ ரயில் தலைமை அலுவலகக் கட்டடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும், குறைவான தண்ணீர் பயன்பாடு, ஆற்றல் மேலாண்மை, புதிய வடிவமைப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில்கீழ், சென்னை மெட்ரோ ரயில் தலைமை நிர்வாக கட்டடத்துக்கு 110-க்கு 70 மதிப்பெண்கள் வழங்கி கோல்டு ரேட்டிங்' என்ற முதல்தர சான்றிதழை வழங்கப்பட்டுள்ளது என, சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
விக்னேஷ் ராஜா ஒரு ஜீனியஸ்... எதிர்பார்ப்பை அதிகரிக்கும் தனுஷ் பதிவு!
நாடாளுமன்ற சிறப்பு அமர்வு தொடங்கியது!

சாதனைப் பட்டியலில் இடம்பிடித்த ஆல்ரவுண்டர் க்ருணால் பாண்டியா!

முதல்வர் ஸ்டாலின் தவறாக வழிநடத்தப்படுகிறார்! மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

