ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியை கண்டு ரசித்த ஸ்டாலின்

லண்டன் சென்றுள்ள திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அங்கு விம்பிள்டன் டென்னிஸ் போட்டியை கண்டு ரசித்தார்.

News image
Updated On :12 ஜூலை 2018, 4:26 pm

தினமணி செய்திச் சேவை

லண்டன் சென்றுள்ள திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அங்கு விம்பிள்டன் டென்னிஸ் போட்டியை கண்டு ரசித்தார்.

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அவரது மனைவி துர்காவுடன் ஒரு வார காலப் பயணமாக லண்டன் சென்றுள்ளார். தற்போது அங்கு விம்பிள்டன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. புல்வெளி மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டி உலகப் புகழ்பெற்றது. 

இந்த விளையாட்டை மு.க.ஸ்டாலின் அவா் மனைவியுடன் நேரில் சென்று கண்டு ரசித்தார். தமிழகத்தைச் சேர்ந்த பிரபல டென்னிஸ் வீரர் விஜய் அமிர்தராஜையும் அங்கு மு.க.ஸ்டாலின் சந்தித்துப் பேசினார்.

Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.