ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்வு: விரைவில் முழுக் கொள்ளளவு

மேட்டூர் அணையின் நீர்வரத்து 59,954 கனஅடியில் இருந்து 64,595 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் 112.04 அடியில் இருந்து 114.63 அடியாக உயர்ந்துள்ளது. 

News image
Updated On :21 ஜூலை 2018, 4:57 am

DIN

கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வந்த கன மழை காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பின.  இதனால் இரு அணைகளின் பாதுகாப்புக் கருதி உபரி நீர் காவிரியில் வெளியேற்றப்படுகிறது. உபரி நீர் வரத்து காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. 

இந்த நிலையில், கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்துக் குறைந்த காரணத்தாலும், கர்நாடக முதல்வர் குமாரசாமி, கிருஷ்ணராஜசாகர் அணையைப் பார்வையிட இருப்பதாலும் அணை நிரம்பிய நிலையில் வைத்திருக்க காவிரியில் உபரி நீரின் திறப்பு வெகுவாகக் குறைக்கப்பட்டது.  இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நொடிக்கு 1,01,277 கனஅடியாக இருந்தது, வெள்ளிக்கிழமை காலை நொடிக்கு 59,954 கன அடியாகச் சரிந்தது. 

இருப்பினும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெள்ளிக்கிழமை காலை 112.04 அடியாக உயர்ந்தது.  அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 20 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 81.33 டி.எம்.சி.யாக இருந்தது. 

இந்நிலையில், சனிக்கிழமை காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்வரத்து 59,954 கனஅடியில் இருந்து 64,595 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் 112.04 அடியில் இருந்து 114.63 அடியாக உயர்ந்துள்ளது. தற்போது அணையின் நீர்இருப்பு 85.16 டிஎம்சி.,யாக உள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 20,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படுவதாலும், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிந்ததாலும், அணை நிரம்புவது தள்ளிப் போகிறது என்று பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.