புதுச்சேரிக்கு உடனடியாக மாநில அந்தஸ்து: மத்திய அரசுக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்

புதுச்சேரிக்கு உடனடியாக மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
புதுச்சேரிக்கு உடனடியாக மாநில அந்தஸ்து: மத்திய அரசுக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: புதுச்சேரிக்கு உடனடியாக மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் ஞாயிறன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பா.ஜ.க.வின் 3 நியமன எம்.எல்.ஏ.க்களை பேரவைக்குள் அனுமதிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் புதுச்சேரி பட்ஜெட்டிற்கு ஆளுநர் கிரண் பேடி ஒப்புதல் அளித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களுக்காக, புதுச்சேரி மக்களின் நலனை புறக்கணிக்கும் வகையில் நிதி மசோதாவை  துணை நிலை ஆளுநர் கிடப்பில் போட்டு வைத்திருக்கிறார்.

இதுபோன்று திட்டமிட்டு உருவாக்கிய "நிதி நெருக்கடியால், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து அளிக்க வேண்டும் என சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் முக்கியத்துவம் பெறுகிறது.

எனவே உடனடியாக புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும். அதுவரை முதலமைச்சரின் அதிகாரங்களில் தேவையில்லாம குறுக்கிடுவதை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி நிறுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com