நெடுஞ்சாலைத் துறை சார்பில் அளிக்கப்பட்ட ஒப்பந்தப் பணிகளில் பல கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றுள்ளதாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து திங்கள்கிழமை மனு அளித்தார்.
கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பன்வாரிலால் புரோஹித்தைச் சந்தித்து மு.க.ஸ்டாலின் அளித்த மனு விவரம்:
30-க்கும் மேற்பட்ட இடங்களில்... நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரராக இருக்கும் நாகராஜன் செய்யாத்துரையின் சொந்த நிறுவனங்கள் மற்றும் தொடர்புடைய நிறுவனங்கள் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். இதில் ரூ.180 கோடியும், 105 கிலோவுக்கும் மேற்பட்ட தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
வருமான வரிச் சோதனை நடைபெற்ற எஸ்.பி.கே. குழும நிறுவனங்களின் மேலாண்மை இயக்குநரான நாகராஜன், வெங்கடாஜலபதி அண்ட் கோ என்ற நிறுவனத்திலும் பங்குதாரர் ஆவார்.
பி. சுப்பிரமணியம் மற்றும் நாகராஜன் செய்யாத்துரை மற்றும் சேகர் ரெட்டி ஆகியோர் பங்குதாரர்களாக இருக்கும் வெங்கடாஜலபதி அண்ட் கோ, ஸ்ரீ பாலாஜி டோல்வேஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் எஸ்.பி.கே. அண்ட் கோ நிறுவனங்களுக்கு ரூ.3,120 கோடி மதிப்புள்ள நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்கள் சட்ட விரோதமாக வழங்கப்பட்டுள்ளன.
எனவே, ரூ.3,120 கோடி நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தத்தில் நடைபெற்ற ஊழல் மீதும், அதில் தொடர்புடையவர்கள் மீதும் ஊழல் தடுப்புச் சட்டம் 1988-ன் படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிபிஐ விசாரணை தேவை: இது தவிர, தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசுத் துறைகளில் மத்திய நிதியுதவி மூலம் நடைபெறும் திட்டங்களிலும், பணிகளிலும் ஊழல் நடைபெற்றுள்ளதால், சிபிஐ விசாரணை நடத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
உள்துறைக்கு அனுப்பப்படும்: பின்னர் செய்தியாளர்களிடம் மு.க.ஸ்டாலின் கூறியது: ஆளுநர் மனுவைப் பெற்று, உள்துறைக்கு அனுப்பி நடவடிக்கை எடுப்பதாகக் கூறினார். நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறோம்.
அப்படி எடுக்காவிட்டால், நெடுஞ்சாலை முறைகேடு குறித்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடருவோம் என்றார்.
சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன், எம்.எல்.ஏ.க்கள் ஐ.பெரியசாமி, க.பொன்முடி, ஜெ.அன்பழகன், மா.சுப்பிரமணியன் ஆகியோர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani

கூட்டணியே தேவை இல்லை என்பதை விரைவில் பரிசீலிப்போம்: மு.க. ஸ்டாலின்

குடை எடுத்துச் செல்லுங்கள்.. அடுத்த 2 நாள்களுக்கு மழைக்கு வாய்ப்பு!

ஹைதியை வீழ்த்தி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது மொராக்கோ!
விடியோக்கள்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani

UN Kannan Interview | விஜய், உதயநிதி மோதல் தொடர்ந்தால்...? | CM Vijay | TVK | Udhayanidhi | DMK

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP



