திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!கண்தானம் செய்திருந்த பாக்யராஜ்! மறைந்தாலும் உலகைக் கண்பார்!கே. பாக்யராஜ் உடலுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி!திரைக்கதை மன்னன் பாக்யராஜ் மறைந்தார்!திரையுலகம் அதிர்ச்சி! பிரபல இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் காலமானார்!மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

18 எம்.எல்.ஏ.-க்கள் தகுதி நீக்க வழக்கு விசாரணை தொடக்கம்

டிடிவி தினகரன் தரப்பு ஆதரவு எம்.எல்.ஏ.-க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் 3-ஆவது நீதிபதி எம்.சத்தியநாராயணன் முன் திங்கள்கிழமை விசாரணை தொடங்கியது.

Updated On :24 ஜூலை 2018, 1:38 am IST

டிடிவி தினகரன் தரப்பு ஆதரவு எம்.எல்.ஏ.-க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் 3-ஆவது நீதிபதி எம்.சத்தியநாராயணன் முன் திங்கள்கிழமை விசாரணை தொடங்கியது.
முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி மீது நம்பிக்கையில்லை எனக் கூறி டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் ஆளுநரிடம் மனு கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து எம்.எல்.ஏக்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்து பேரவைத் தலைவர் தனபால் உத்தரவிட்டார். இந்தத் தகுதி நீக்க உத்தரவை எதிர்த்து 18 எம்.எல்.ஏ.-க்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு மாறுபட்ட தீர்ப்பை அளித்தனர். இதனையடுத்து உச்சநீதிமன்ற உத்தரவுப்படி இந்த வழக்கை விசாரிக்கும் 3-ஆவது நீதிபதியாக எம்.சத்தியநாராயணன் நியமிக்கப்பட்டார்.
விசாரணை தொடங்கியது: இந்த வழக்கு நீதிபதி எம்.சத்தியநாராயணன் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது சட்டப்பேரவைத் தலைவர், அரசு கொறடா உள்ளிட்டோர் தரப்பில் மூத்த வழக்குரைஞர்கள் சி.ஆர்யமாசுந்தரம், சி.எஸ்.வைத்தியநாதன் ஆகியோரும், 18 எம்எல்ஏ-க்கள் சார்பில் மூத்த வழக்குரைஞர்கள் பி.எஸ்.ராமன், மோகன் பராசரன் ஆகியோரும் ஆஜராகினர்.
எம்.எல்.ஏ.-க்களுக்கு ஆதரவாக...: தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.-க்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் பி.எஸ்.ராமன் தனது வாதத்தைத் தொடங்கினார். அவர் தனது வாதத்தில், முதல்வருக்கு எதிராக ஆளுநரிடம் கடிதம் கொடுத்த சமயத்தில் அதிமுக கட்சியே இரண்டு அணிகளாகப் பிரிந்திருந்தது.
அதிமுக கட்சியும், இரட்டை இலை சின்னமும் முடக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில், 18 எம்.எல்.ஏ.-க்கள் மீது கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் எப்படி நடவடிக்கை எடுக்க முடியும்? மேலும் இந்த விவகாரத்தில் சட்டப்பேரவைத் தலைவரின் உத்தரவு அரசியல் சாசனத்துக்கு எதிரானது. பேரவைத் தலைவரின் இந்த உத்தரவு விதிமுறைகளுக்கு முரணாக இருந்தால் , நீதிமன்றம் அதில் தலையிட்டு ஆய்வு செய்ய முடியும்.
ஆதாரம் உள்ளதா?: 18 எம்.எல்.ஏ.-க்களும் அரசுக்கு எதிராக எதிர்கட்சித் தலைவருடன் சேர்ந்து செயல்பட்டனர் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. 
அரசு கொறடாவின் உத்தரவை மீறி கட்சிக்குள் பிளவு ஏற்படுத்தி இந்த அரசுக்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏ-க்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத பேரவைத் தலைவர், இந்த 18 எம்.எல்.ஏக்களை மட்டும் அவசர கதியில் தகுதி நீக்கம் செய்ததிலிருந்து அவர் உள்நோக்கத்த்துடன், பாரபட்சமாக செயல்பட்டது தெளிவாகிறது.
அச்சமே காரணம்: 18 எம்.எல்.ஏக்களையும் தகுதி நீக்கம் செய்யாமல், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தினால் அவர்கள் இந்த ஆட்சிக்கு எதிராக வாக்களித்து விடுவார்கள் என்ற அச்சத்தில்தான் நடந்துள்ளது. ஆனால், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தியிருந்தாலும் நாங்கள் ஆட்சியைக் கலைத்திருக்க மாட்டோம் என ஏற்கெனவே உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடமே தெரிவித்துள்ளோம் என மூத்த வழக்குரைஞர் பி.எஸ்.ராமன் வாதிட்டார்.
இன்றும் தொடர்கிறது: இந்த வழக்கில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.-க்களுக்கு ஆதரவான வாதம் செவ்வாய்க்கிழமையும் தொடர்ந்து நடைபெற உள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.