டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 8 காசுகள் சரிந்து ரூ. 94.20 ஆக நிறைவு!பணவீக்கம் எதிரொலி: சென்செக்ஸ் 319 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 25,150-க்கு கீழ் நிறைவு!மீனவர்கள் பாதுகாப்பு குறித்து முதல்வர் விஜய் ஆலோசனை கௌரவ விரிவுரையாளர்கள் மாதாந்திர தொகுப்பூதியம் ரூ.5,000 உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்பு

தற்காலிக அரசு செவிலியர்களுக்கான ஊதியம் இருமடங்காக உயர்வு: தமிழக அரசு 

தமிழகத்தில் பணிபுரியும் தற்காலிக அரசு செவிலியர்களுக்கான ஊதியம் இருமடங்காக உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

Updated On :

சென்னை: தமிழகத்தில் பணிபுரியும் தற்காலிக அரசு செவிலியர்களுக்கான ஊதியம் இருமடங்காக உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் தொகுப்பூதிய அடிப்படையில் செவிலியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். சமீபத்தில் அவர்கள் தங்களுக்கான ஊதியத்தினை உயர்த்தக் கோரி பெரிய அளவிலான போராட்டம் ஒன்றை சென்னையில் நடத்தினர்.

இந்நிலையில் தமிழகத்தில் பணிபுரியும் தற்காலிக அரசு செவிலியர்களுக்கான ஊதியம் இருமடங்காக உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தமிழகத்தில் ரூ.7000 தொகுப்பூதியம் பெற்று பணியாற்றி வரும் தற்காலிக செவிலியர்களின் ஊதியமானது தற்பொழுது ரூ.14000 ஆக உயர்த்தப்படுகிறது.

இந்த ஊதிய உயர்வானது ஏப்ரல் 1, 2018 முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும்

இதன் மூலம் தமிழக அரசில் தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றி வரும் 12000 செவிலியர்கள் பயன்பெறுவார்கள்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.