திமுக தலைவர் கருணாநிதியை பார்க்க தனியாக திருக்குவளையிலிருந்து கோபாலபுரத்துக்கு வந்த மூதாட்டி இவர்தான்!
திமுக தலைவர் கருணாநிதிக்கு சுவாசக் கோளாறு காரணமாக ட்ரக்கியாஸ்டமி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.


திமுக தலைவர் கருணாநிதிக்கு சுவாசக் கோளாறு காரணமாக ட்ரக்கியாஸ்டமி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், சிறுநீரக நோய்த்தொற்று ஏற்பட்டு கடந்த இரண்டு நாள்களாக சென்னை கோபாலபுரம் இல்லத்தில் தொடர் சிகிச்சை பெற்று வந்தார். திடீரென ஏற்பட்ட ரத்த அழுத்தக் குறைவும் ஏற்பட்டது. அவரது உடல்நிலைக் குறித்து ஒட்டுமொத்த தமிழகமே கவலையில் ஆழ்ந்தது.
பிரதமர் மோடி, அரசியல் கட்சித் தலைவர்கள், நடிகர்கள் என பலரும் அவரது உடல்நிலை குறித்து குடும்பத்தாரிடம் விசாரித்து வருகின்றனர். மேலும்
கட்சித் தொண்டர்கள், பொதுமக்கள், மீடியா என கோபாலபுரத்தில் திரண்டிருந்த கூட்டம் பெருகிக் கொண்டிருந்த நிலையில், கலைஞரை நேரில் பார்த்து உடல்நலம் குறித்த தகவலை அறிந்து கொள்ள திருக்குவளையிலிருந்து கோபாலாபுரத்துக்கு தனி ஆளாக வந்தார் ஒரு மூதாட்டி. அவர் பெயர் ரத்தினாம்பாள். அவருக்கு வயது 85. தொலைக்காட்சியில் கலைஞரின் உடல்நலக் குறைவு செய்தியைப் பார்த்த மனத்தாங்கலில் இரவு 10.30 மணிக்கு வீட்டிலிருந்து தனியாகக் கிளம்பி சென்னை பஸ்சில் ஏறிவிட்டாராம். அடையாறில் இறங்கியவர் எப்படியோ விசாரித்து கோபாலபுரத்துக்கு வந்து சேர்ந்தார். எப்படியாவது தலைவரைப் பார்த்துவிட வேண்டும் என்று உறுதியாக இருந்தவரிடம் எம் எல் ஏ பி.கே.சேகர் பாபு விசாரித்து, அவரை ஸ்டாலினிடக் அழைத்துச் சென்றுள்ளார். அங்கிருந்த நிலையை உணர்ந்து கலைஞரைப் பார்க்க முடியாத வருத்தம் இருந்தாலும், தகவல்களை நேரில் கண்டு தெரிந்து கொண்ட மனநிலையில் அவர் கிளம்பினார். அவரின் வழிச் செலவுக்காக பணம் கொடுத்து பத்திரமாக அனுப்பி வைத்தனர்.
சென்னை காவேரி மருத்துவமனையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த டிகேஎஸ் இளங்கோவன் கூறியது, 'நேற்று இரவு திடீரென கருணாநிதிக்கு உடல் நலம் குன்றியது. உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு வந்தால் உடல்நிலையை சீர் செய்யலாம் என்று மருத்துவர்கள் கூறினர்.
இதையடுத்தே நேற்று நள்ளிரவு 1 மணியளவில் கருணாநிதியை காவேரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவர்கள் கூறியபடியே, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்த சிறிது நேரத்திலேயே உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. மருத்துவமனைக்கு வரும் போது ரத்த அழுத்தம் குறைவாக இருந்தது. சிகிச்சை பெறத் தொடங்கியதுமே ரத்த அழுத்தம் சீரானது.
தற்போது அவரது உடல்நிலை நன்றாக உள்ளது. மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்பதற்காக இரண்டு நாட்களுக்கு கருணாநிதி காவேரி மருத்துவமனையிலேயே இருப்பார்’ என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...