மருத்துவ துறையில் ஆச்சரியப்படும் அதிசயம் தான் கருணாநிதி: வைகோ
எமனையும் ஜெயித்து மீண்டு வருவார் கருணாநிதி என் மதிமுக பொதுச்செயலர் வைகோ தெரிவித்துள்ளார்.


சென்னை: எமனையும் ஜெயித்து மீண்டு வருவார் கருணாநிதி என மதிமுக பொதுச்செயலர் வைகோ தெரிவித்துள்ளார்.
ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துமனையில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில்,
கருணாநிதியின் உடல்நலம் முன்னேற்றம் அடைந்தது குறித்து நான் மகிழ்ச்சி அடைந்தேன். தீவிர சிகிச்சை அளித்தாலும், அவராகவே மீண்டு வந்துள்ளார்.
ஆபத்தான நிலையில் இருந்து தேறி மன உறுதியுடன் முன்னேறி வருகிறார் கலைஞர் கருணாநிதி. மருத்துவ துறையில் ஆச்சரியப்படும் வகையில் அதிசயமாகக் கருணாநிதி உடல்நலம் மாறியது.
அவர் பல போராட்டங்களைத் தாண்டி வந்துள்ளார். தமிழர் நலனுக்காகப் பாடுபட்டவர். தற்போது எமனோடு போராடி வருகிறார். எமனையும் வென்று மீண்டு வருவார் என்று அவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...