திமுக தலைவர் கருணாநிதிக்கு மோடி பிறந்தநாள் வாழ்த்து
திமுக தலைவர் கருணாநிதியின் 95-ஆவது பிறந்தநாளுக்கு பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


திமுக தலைவர் கருணாநிதி இன்று 95-ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்திய அரசியலில் மிகவும் மூத்த அரசியல் தலைவரான கருணாநிதிக்கு பல கட்சி அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் கருணாநிதிக்கு தற்போது வாழ்த்து தெரிவித்தார்.
அதில் அவர் கூறியதாவது,
"கலைஞர் கருணாநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அவர் சிறந்த எழுத்தாளர், கவிஞர், சிந்தனையாளர் மற்றும் பேச்சாளர். இந்தியாவின் மிகவும் மூத்த அரசியல் தலைவர்களுள் கருணாநிதியும் ஒருவர். அவர், ஆரோக்கியத்துடன் நீண்ட நாள்கள் வாழ ஆசி பெறவேண்டும்" என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...