எடப்பாடி பேருந்து நிலையம் அருகில் உள்ள நஞ்சுண்டேஸ்வரர் ஆலயம் மற்றும் அந்த ஆலயத்தின் பிரகாரத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தனது சொந்த செலவில் கட்டிய முருகன் கோயிலுக்கு, வரும் ஆகஸ்ட் 30-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
எடப்பாடி பகுதியில் பிரசித்தி பெற்ற நஞ்சுண்டேஸ்வரர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் பின்புறம் சிதிலமடைந்த பழமையான முருகன் கோயில் உள்ளது. தீவிர முருக பக்தரான தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி நஞ்சுண்டேஸ்வரர் கோயில் பிரகாரத்தில் உள்ள முருகன் சந்நிதியை தனது சொந்தச் செலவில் புதுப்பித்து கட்டித் தர இசைவு தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.