வள்ளுவர் கோட்டம் விரைவில் புதுப்பிக்கப்படும்

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வள்ளுவர் கோட்டம் விரைவில் புதுப்பிக்கப்படும் என்று செய்தித் துறை அமைச்சர் கடம்பூர் சி.ராஜூ தெரிவித்தார்.
வள்ளுவர் கோட்டம் விரைவில் புதுப்பிக்கப்படும்
Updated on
1 min read

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வள்ளுவர் கோட்டம் விரைவில் புதுப்பிக்கப்படும் என்று செய்தித் துறை அமைச்சர் கடம்பூர் சி.ராஜூ தெரிவித்தார்.
சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரத்தின் போது, திமுக உறுப்பினர் கு.க.செல்வம் (ஆயிரம் விளக்கு) இதுதொடர்பான கேள்வியை எழுப்பினார். இதற்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ அளித்த பதில்:
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வள்ளுவர் கோட்டத்தில் கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் 2016-ஆம் ஆண்டு வரையில் பராமரிப்புப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. ஒக்கி புயல் வந்த நேரத்திலும் புயல் மழையால் சேதமடைந்த சுற்றுச்சுவர் கடந்த நிதியாண்டில் ரூ.10 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டு கட்டி முடிக்கப்பட்டது.
சென்னை மாநகரின் முக்கியப் பகுதியிலுள்ள வள்ளுவர் கோட்டத்தைத் தொடர்ந்து நல்ல முறையில் பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வள்ளுவர் கோட்டத்தைப் புதுப்பிப்பது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். துறையின் சார்பாக ஆய்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. விரைவில் மானியக் கோரிக்கை வரும் போது அதைப் பற்றி விரிவான அறிக்கை வர இருக்கிறது என்று பதிலளித்தார்.
தேவநேயப் பாவாணர் நூலகம்: இதைத் தொடர்ந்து, அதிமுக உறுப்பினர் ராஜன் செல்லப்பா (மதுரை வடக்கு) துணைக் கேள்வி எழுப்பினார். தேவநேயப் பாவாணர் நூலகத்தில் கூடுதலாக நூலகர்கள் நியமிக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்தார். இதற்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ அளித்த பதில்:
தேவநேயப் பாவாணருக்கு சிறப்புச் செய்யும் நிகழ்வு அரசு சார்பாக சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. உறுப்பினர் வைத்த கோரிக்கை போன்று, சமூக ஆர்வலர்களிடமும் நூலகத்தை விரிவுபடுத்தக் கோரி கோரிக்கைகள் வந்துள்ளன. அது அரசின் பரிசீலனையில் உள்ளது. தேவநேயப் பாவாணர் நூலகம் விரிவாக்கப்படும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com