எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

ஆன்மீக அரசியல் என்றால் என்ன? ரஜினிக்கு சத்யராஜ் நேரடி தாக்கு

ஆன்மீக அரசியல் என்பது அன்பால் அரவணைப்பது என்று சத்யராஜ் கூறினார்.

News image
கோப்புப்படம்
Updated On :5 ஜூன் 2018, 3:03 am

DIN

திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்தநாள் கடந்த 3-ஆம் தேதி தொண்டர்களால் விமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்த வரிசையில் நேற்று (திங்கள்கிழமை) சென்னை பெரியார் திடலில் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு விழா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த விழாவில் நடிகர் சத்யராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்த விழாவில் சத்யராஜ் ரஜினிகாந்தை நேரடியாக தாக்கி பேசியுள்ளதாக தெரிகிறது. இது குறித்து அவர் பேசியதாவது, 

"அரசியல் என்பது வியாபாரம் இல்லை. சரியாக திட்டம் வகுத்து களமிறங்குவது என்பது அரசியல் இல்லை, அது வியாபாரம். அநீதி நடக்கிறது என்று தெரிந்தால் அப்படியே களத்தில் குதித்துவிட வேண்டும். அதைவிட்டு இப்படி ஒரு வியாபாரத்தை தொடங்கி அதற்கு ஒரு பெயர் சூட்டக்கூடாது. அப்படி தொடங்கிய ஒரு வியாபாரத்தின் பெயர் தான் ஆன்மீக அரசியல்.

ஆன்மீக அரசியல் என்பது எனக்கு தெரிந்து இரும்புக்கரம் கொண்டு அடக்குவது அல்ல. அன்புக்கரம் கொண்டு அரவணைப்பது தான் ஆன்மீக அரசியல்" என்று சத்யராஜ் பேசினார்.

அண்மையில் தூத்துக்குடிக்கு சென்ற ரஜினிகாந்த், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இரும்புக்கரம் போல் கட்டிக்காத்து வந்தார் என்று கூறியிருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.