தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

பிளாஸ்டிக் உபயோகத்தை தவிர்க்க வேண்டும் : நடிகர் விவேக் வேண்டுகோள்

சுற்றுலாத் தலங்களுக்கு வருவோர் பிளாஸ்டிக் உபயோகத்தை தவிர்க்க வேண்டும் என்று உதகையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உலக சுற்றுச் சூழல் தின நிகழ்ச்சியில் நடிகர் விவேக் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

News image
உதகை  ஸ்டீபன் ஆலய வளாகத்தில் மரக் கன்றுகளை நடும் நடிகர் விவேக். உடன், மாவட்ட  ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா  உள்ளிட்டோர்.
Updated On :5 ஜூன் 2018, 9:21 pm

DIN

சுற்றுலாத் தலங்களுக்கு வருவோர் பிளாஸ்டிக் உபயோகத்தை தவிர்க்க வேண்டும் என்று உதகையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உலக சுற்றுச் சூழல் தின நிகழ்ச்சியில் நடிகர் விவேக் வேண்டுகோள் விடுத்துள்ளார். 
உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி நீலகிரி மாவட்ட நிர்வாகம், வனத் துறை ஆகியன சார்பில் உதகையிலுள்ள ஸ்டீபன் ஆலய வளாகத்தில் மர கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக திரைப்பட நடிகர் விவேக் கலந்துகொண்டு மர கன்றுகளை நட்டார். 
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: 
நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்ப்பது பற்றி மக்களிடையே சிறப்பான முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் உள்ளூர் மக்கள் பிளாஸ்டிக் பயன்பாட்டை பெரும்பாலும் தவிர்த்து வருவதாக கூறப்படுகிறது. 
ஆனால், நீலகிரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்க்க மறந்துவிடுவதாக கூறப்படுகிறது. பிளாஸ்டிக் பயன்பாட்டால் சுற்றுலாத் தலங்கள் மாசுபடும் என்பதை சுற்றுலாப் பயணிகள் உணர வேண்டும். எனவே, நீலகிரியைக் காக்கும் வண்ணம் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்றார். 
இதைத் தொடர்ந்து, நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குழந்தைகள், தன்னார்வத் தொண்டு அமைப்பினரை சுற்றுச்சூழல் குறித்த உறுதிமொழி ஏற்கவைத்தார். 
இந்நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெ.சண்முக பிரியா, மாவட்ட வன அலுவலர், சமூக ஆர்வலர்கள், பள்ளி மாணவ, மாணவிகள், தனியார் விடுதி ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து 
கொண்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.