கோயம்புத்தூர் சிறைக் கைதி மரண சம்பவம் தொடர்பாக, தலைமைக் காவலர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.
சட்டப் பேரவையில் வியாழக்கிழமை கேள்வி நேரத்துக்குப் பிறகு, சட்டப் பேரவை காங்கிரஸ் குழுத் தலைவர் ராமசாமி பேசினார். அப்போது நடந்த விவாதம்:-
ராமசாமி: கோவை சிறையில் இரண்டு கைதிகள் தாக்கிக் கொண்டதில் ஒருவர் இறந்துள்ளார். இது போன்ற சம்பவங்களை ஏற்றுக் கொள்ள முடியாது. சிறைச் சாலைகளில் போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.
அமைச்சர் சி.வி.சண்முகம்: விசாரணைக் கைதியான ரமேஷ், 30 ஆண்டுகளாக மனநிலை பாதிக்கப்பட்டவராக இருந்தார். அவர் சிறையில் கண்காணிப்பு அறையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதே போன்று விஜய் என்ற கைதியும் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இருவருக்கும் ஏற்பட்ட வாய்த் தகராறில் விஜய் என்பவர் ரமேஷை தாக்கினார். அதில், ரமேஷ் மருத்துவமனை செல்லும் வழியில் இறந்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக தலைமைக் காவலர் முனுசாமி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தச் சம்பவம் குறித்து துறை ரீதியான விசாரணைக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சாலையில் நின்ற லாரி மீது மோட்டாா் சைக்கிள் மோதல்: இளைஞா் உயிரிழப்பு
டெலிவரி பாய் படத்தின் செங்காத்தியே பாடல் வெளியீடு!
வீட்டில் கஞ்சா செடி வளா்ப்பு: தொழிலதிபரிடம் விசாரணை

சென்னையில் 574 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 1,339 கிலோ கஞ்சா அழிப்பு
விடியோக்கள்

19 வருட பந்தம்; மெஸ்ஸி vs லமின் யமால்: வெல்லப்போவது யார்? | Lionel Messi | FIFA | FIFA World Cup |
தேசிய கவனம் பெறும் Sonam Wangchuk

The Odyssey எப்படி இருக்கு? | Public Review | The Odyssey Review | Christopher Nolan |


