அரசுப் பேருந்துகளில் சத்தமாக ரீல்ஸ் பார்க்கக் கூடாது! முக்கிய அறிவிப்புதமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புவிவசாயக் கடன் தள்ளுபடி திட்டம் இல்லை: நிதித் துறை அமைச்சர்ஒரே நாளில் 2,036 காவலா்கள் பணியிட மாற்றம்பொட்டாஷ் உரம் தட்டுப்பாடு: விவசாயிகள் வேதனை
/

இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டே வலம் வரும் பெண்!

தமிழகத்தில் பெண்களுக்கு உரிய பாதுகாப்பை வலியுறுத்தி கூடலூர் பகுதியைச் சேர்ந்த பெண் இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டே விழிப்புணர்வுப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

News image

இருசக்கர வாகனத்தில் விழிப்புணர்வுப் பிரசாரத்தில் ஈடுபட்ட கூடலூர் பெண் ஷிபி.

Updated On :30 ஜனவரி 2024, 6:45 pm IST

தமிழகத்தில் பெண்களுக்கு உரிய பாதுகாப்பை வலியுறுத்தி கூடலூர் பகுதியைச் சேர்ந்த பெண் இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டே விழிப்புணர்வுப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
நீலகிரி மாவட்டம், கூடலூர் பகுதியைச் சேர்ந்தவர் ஷிபி (45). இரு குழந்தைகளுக்குத் தாயான இவர் அங்கு மகளிர் தையலகத்தை நடத்தி வருகிறார். 
உலக சாதனைக்காக இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டே 3 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவு செல்லத் திட்டமிட்டு உதகையில் தனது பயணத்தை புதன்கிழமை தொடங்கினார். இப் பயணத்தை பிரசாரப் பயணமாக உருவாக்கிக் கொண்ட இவர் இயற்கையோடு இணைந்தே பெண்மையைக்
காப்போம் என்கிற தலைப்பில் உதகையில் இருந்து சென்னைக்கு 32 மாவட்டங்களிலும் சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தவும் திட்டமிட்டுள்ளார்.
அதன் ஒரு பகுதியாக வியாழக்கிழமை காலையில் ஈரோடு வந்த அவர், இரு சக்கர வாகனத்தில் நின்றுகொண்டே சென்றார். 
இது குறித்து ஷிபி கூறியதாவது: 
பெண்களுக்குரிய பாதுகாப்பை வழங்க வலியுறுத்தி தொடங்கிய இப் பயணத்தை ஜூன் 13ஆம் தேதி சென்னையில் நிறைவு செய்ய உள்ளேன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.