சென்னையில் காலா' திரைப்படம் வெளியிடப்பட்ட திரையரங்குகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் நடித்த காலா' திரைப்படம் சென்னையில் 66 திரையரங்குகளில் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. காலா திரைப்படத்தின் வெளியீட்டின் காரணமாக, திரையரங்குகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. திரையரங்குக்கு வரும் ரசிகர்களுக்கும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
சென்னையில் இந்தத் திரைப்படம் வெளியிடப்பட்டுள்ள 66 திரையரங்குகளிலும் தலா ஒரு காவல் ஆய்வாளர் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை கடந்த வாரம் நேரில் சந்தித்து ஆறுதல் கூறச் சென்ற நடிகர் ரஜினிகாந்த், சமூக விரோதிகள் போராட்டத்தில் ஊடுருவியதால்தான் போராட்டம் திசை மாறியதாக கருத்து தெரிவித்தார். இந்தக் கருத்துக்கு, அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதேவேளையில் காலா திரைப்படத்தின் கதைக்கு சிலர் உரிமை கோரி வந்தனர். இப்பிரச்னைகளின் காரணமாகவே, காலா திரைப்படம் வெளியிடப்பட்டுள்ள திரையரங்குகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறையைச் சேர்ந்த உயர் அதிகாரி தெரிவித்தார். இந்தப் பாதுகாப்பு நிலைமை சீராகும் வரை நீடிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








