சென்னை: ஈரானில் சிக்கித் தவிக்கும் 21 தமிழக மீனவர்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகத்தின் திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த 21 மீனவர்களை மீன்பிடிப்பு பணிக்காக, ஈரான் நிறுவனம் ஒன்று பணியமர்த்தி இருந்தது. ஆனால் அவர்களுக்கான ஒப்பந்த காலம் முடிந்த பின்னரும் அவர்களுக்கான உரிய ஊதியம் வழங்கப்படவில்லை. அத்துடன் அவர்களுடைய பாஸ்போர்ட்டுகளையும் அந்த நிறுவனம் வாங்கி வைத்துக் கொண்டு தர மறுக்கிறது. இதன் காரணமாக அவர்கள் தற்பொழுது ஈரானில் சிக்கித் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஈரானில் சிக்கித் தவிக்கும் 21 தமிழக மீனவர்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
அவர் தனது கடிதத்தில் கூறியுள்ளதாவது:
ஒப்பந்தப்படி ஊதியம் அளிக்கப்படாமல் ஈரானில் சிக்கித் தவிக்கும் 21 தமிழக மீனவர்களை மீட்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஈரானில் இருக்கும் இந்திய தூதரக அதிகாரிகள் மூலம் இதற்கான நடவடிக்கைகளை விரைந்து எடுத்து மீனவர்கள் மீட்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தங்கம் விலை குறைவு: வெள்ளி?

அதிமுக நம்மை ஆள நினைக்கும் அரசியல் பிழை நடக்ககூடாது: ப.சிதம்பரம்

இந்திய பங்குச் சந்தை ஏற்றத்துடன் வர்த்தகம்!

சமந்தாவின் மா இன்டி பங்காரம் படத்தின் முதல் பாடல்!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


