அஞ்சல் துறையின் அலட்சியத்தால் மருத்துவப் படிப்புக்கு உரிய நாளில் விண்ணப்பம் சென்று சேராத நிலையில், பாதிக்கப்பட்ட சிவகங்கை மாணவரின் விண்ணப்பம் சென்னை மருத்துவக் கல்லூரி இயக்குநரகத்தால் செவ்வாய்க்கிழமை ஏற்றுக் கொள்ளப்பட்டது.
சிவகங்கை அருகே உள்ள காஞ்சிரங்கால் கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டிச்செல்வம், வெளிநாட்டில் பணியாற்றி வருகிறார். இவரது மகன் வசந்த், பிளஸ் 2 தேர்வில் 1125 மதிப்பெண் பெற்றுள்ளார். நீட் தேர்வில் 384 மதிப்பெண் பெற்றுள்ளார்.
தொடர்ந்து மருத்துவப் படிப்பிற்கான விண்ணப்பத்தை பெற்று, சிவகங்கை அருகே உள்ள காஞ்சிரங்கால் தபால் நிலையத்தில் கடந்த ஜூன் 14-ஆம் தேதி விரைவு தபால் மூலம் சென்னை மருத்துவக் கல்லூரி இயக்குநரகத்திற்கு அனுப்பினாராம்.
விண்ணப்பம் கிடைக்க வேண்டிய கடைசி நாள் ஜூன் 19-ஆம் தேதி என்ற நிலையில், அஞ்சலகத் துறையின் கவனக் குறைவால் விண்ணப்பம் கடந்த ஜூன் 24-ஆம் தேதிதான் மருத்துவக் கல்வி இயக்குநரகத்திற்கு கிடைத்துள்ளது.
இந்நிலையில், மருத்துவக் கல்வி இயக்குநரகத்தின் முதன்மை இயக்குநர் எட்வின் ஜோ எம்பிபிஎஸ் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க கடந்த ஜூன் 19ஆம் தேதி கடைசி என அறிவிக்கப்பட்டிருந்தாலும், மருத்துவக் கல்வி இயக்குநரகத்திற்கு அனுப்பிய விண்ணப்பங்கள் காலதாமதமாக கிடைத்திருந்தால், அதுகுறித்த முழு விவரங்கள் அடங்கிய ஆவணங்களை மருத்துவப் படிப்பு தேர்வுக் குழு தலைவரிடம் விண்ணப்பதாரர்கள் சமர்பிக்கலாம்.
அவை ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் வரும் ஜூன் 28-ஆம் தேதி வெளியிடப்படும் மருத்துவ மாணவருக்கான தரவரிசைப் பட்டியலில் விண்ணப்பித்த மாணவர்களின் பெயர் சேர்க்கப்படும் என்று அண்மையில் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த வசந்த் மற்றும் அவரது உறவினர்கள் சிலர் சென்னை கீழ்ப்பாக்கத்திலுள்ள மருத்துவக் கல்லூரி இயக்குநரகத்திற்கு செவ்வாய்க்கிழமை சென்றனர். அங்கு வசந்த் விண்ணப்பித்ததற்கான முழு ஆவணங்களையும் சமர்ப்பித்ததால், தாமதமாகக் கிடைத்த அவரது விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக மருத்துவக் கல்லூரி இயக்குநரகம் அறிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கரூர் சம்பவத்திற்குப் பின்... முதல்வராக சாலை வலம் செல்லும் விஜய்!

கரூரில் முதல்வர் விஜய்! இன்றைய செய்திகள் ஜூலை 10 - நேரலை
கரூர் நெரிசலில் பலியானவர்களுக்கு நினைவுச் சின்னம்! முதல்வர் விஜய் அறிவிப்பு!

125 கல்லூரிகளில் முதல்வர் பணியிடங்களை உடனே நிரப்புக! அன்புமணி வலியுறுத்தல்
விடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | July 12 முதல் 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

ஃபிபா: ஆரம்பமாகிறது காலிறுதிச் சுற்று! | FIFA | FIFA World Cup |

MK Stalin உடன் மீண்டும் பேச்சா? குழப்பும் Thirumavalavan


