நீட் தேர்வு அறவே கூடாது என்பதுதான் சமரசமற்ற, உறுதியான நிலைப்பாடு: தவெக!தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் சோனம் வாங்சுக்!பிரதமர் வீடு அருகே போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் கைது!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கைதுவீட்டு வசதி வாரியத் தலைவராக சிவா நியமனம்!
/

சேலம் அரசு மருத்துவமனையில் நடிகர் மன்சூர் அலிகான் அனுமதி

சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள மன்சூர் அலிகானுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

News image
Updated On :26 ஜூன் 2018, 12:41 pm IST

சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள மன்சூர் அலிகானுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

சேலம் விமான நிலைய விரிவாக்கப் பணிக்கு எதிர்ப்புத் தெரிவித்து தும்பிப்பாடி மாரியம்மன் கோயில் திடலில் கடந்த மே 3 ஆம் தேதி விவசாயிகள் நடத்திய கூட்டத்தில் நடிகர் மன்சூர் அலிகான் கலந்து கொண்டு பேசினார். அப்போது பசுமை வழிச் சாலை, விமான நிலைய விரிவாக்கத் திட்டங்களுக்கு எதிராகப் பேசியதாகவும், பொதுமக்களைத் துண்டி விட்டதாகவும் கூறி கடந்த ஜூன் 17 ஆம் தேதி தீவட்டிப்பட்டி போலீஸார், நடிகர் மன்சூர் அலி கான் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

இதையடுத்து, சென்னை சென்று நடிகர் மன்சூர் அலி கானைக் கைது செய்து, சேலம் அழைத்து வந்து மத்திய சிறையில் அடைத்தனர். சிறையில் நடிகர் மன்சூர் அலிகான் சனிக்கிழமை திடீரென உண்ணாவிரதம் மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, சிறைத் துறை அதிகாரிகள் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, மன்சூர் அலிகான் உண்ணாவிரதத்தைக் கைவிட்டார். 

இந்நிலையில் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள மன்சூர் அலிகானுக்கு இன்று உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் சேலம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.