உலகக் கோப்பை கால்பந்து: இன்று இறுதி ஆட்டத்தில் ஆா்ஜென்டீனா - ஸ்பெயின் மோதல்! பரபரப்பான அரசியல் சூழலில் நாளை கூடுகிறது நாடாளுமன்றம்! தாக்கலாகும் முக்கிய மசோதாக்கள்! நாடாளுமன்ற கூட்டத்துக்கு மத்தியில் சிஜேபி போராட்டம்! தில்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு! ராமா் கோயில் நன்கொடை முறைகேடு விசாரணை கோரும் மனுக்கள்: நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்! ஷிண்டே சிவசேனையில் உத்தவ் கட்சி 6 எம்.பி.க்கள் இணைவு: மக்களவைத் தலைவா் ஒப்புதல்சென்னை மாநகராட்சியில் மண்டல செயற்பொறியாளா் உள்பட 7 போ் பணியிடை நீக்கம்
/

தங்கச்சிமடம் ஆயுதக் குவியலில் 11 ஆயிரம் துப்பாக்கி குண்டுகள்: எஸ்.பி.

ராமேசுவரம் அருகே தங்கச்சிமடத்தில் கண்டெடுத்த ஆயுதக் குவியலில் சுமார் 11 ஆயிரம் துப்பாக்கி குண்டுகள் இருந்தன என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா

News image

தங்கச்சிமடம் பகுதியில் மேலும் வெடி பொருள்கள் உள்ளதா என அதிநவீன தொழில்நுட்ப கருவிகளுடன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்யும் வெடிகுண்டு நிபுணர்கள்.

Updated On :27 ஜூன் 2018, 2:10 am IST

ராமேசுவரம் அருகே தங்கச்சிமடத்தில் கண்டெடுத்த ஆயுதக் குவியலில் சுமார் 11 ஆயிரம் துப்பாக்கி குண்டுகள் இருந்தன என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா தெரிவித்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் அடுத்துள்ள தங்கச்சிமடம் அந்தோணியார்புரம் பகுதியில் திங்கள்கிழமை கழிவுநீர்த் தொட்டி தோண்டும்போது ஆயிரக்கணக்கான துப்பாக்கி தோட்டாக்கள், கண்ணிவெடிகள் உள்ளிட்ட வெடிபொருள்கள் கண்டெடுக்கப்பட்டன. இதையடுத்து அப்பகுதி முழுவதும் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டது. மேலும் மதுரையில் இருந்து வெடி குண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு செவ்வாய்க்கிழமை ஆய்வு நடைபெற்றது. 
இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது: 
தங்கச்சிமடம் அந்தோணியார் புரத்தில் கண்டெடுக்கப்பட்ட வெடிபொருள்களை அந்த இடத்துக்கு அருகிலேயே பாதுகாப்பாக வைத்திருக்கிறோம். விரைவில் அவற்றை செயலிழக்கச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இப்பொருள்களைப் பத்திரமாக பாதுகாக்க ஒரு சார்பு-ஆய்வாளர், 4 காவலர்கள் உள்பட 5 பேர் கொண்ட குழுவினர் அடங்கிய துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. உடனடியாக வெளியில் எடுத்துச் செல்ல முடியாத வெடிபொருளாக இருப்பதால் நீதிபதி முன்பாகவே அழிக்கப்படும். மதுரை மாநகர காவல்துறையை சேர்ந்த வெடிகுண்டு துப்புறியும் நிபுணர்கள் 8 பேர் அடங்கிய குழுவினரும் நேரில் வந்து ஆய்வு செய்து வருகின்றனர். ஆயுதக்குவியலில் சுமார் 11 ஆயிரம் துப்பாக்கிக் குண்டுகள் இருந்தன. 
இவை டி.ஜி.பி. அலுவலக ஆயுதக்கிடங்குக்கு அனுப்பி வைக்கப்படும். அவை எந்த நாட்டில் தயாரிக்கப்பட்டவை என்ற விபரம் இல்லை. ஆனால் கோடு எண் உள்ளது. மத்தியப் பிரதேசத்தில் உள்ள ராணுவ ஆயுதக் கிடங்குக்கு துப்பாக்கி குண்டுகள் அனுப்பப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தி எந்த நாட்டைச் சேர்ந்தவை என்பது கண்டறியப்படும் என்றார்.
ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டது குறித்து ராமேசுவரம் சிறப்பு வட்டாட்சியர் எம்.அப்துல்ஜப்பார் கொடுத்த புகாரின் பேரில் தங்கச்சிமடம் காவல் நிலைய ஆய்வாளர் தி.முருகேசன் வழக்குப்பதிவு செய்து பறிமுதல் செய்துள்ளதாகவும், அவற்றைப் புதைத்தவர்கள் யார் எனத் தெரியவில்லை எனவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வெடிமருந்துப் பொருள்கள் சட்டம் 1908 மற்றும் படைக்கலன்கள் சட்டம் 1959 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவாகியுள்ளது.

Story image

மேலும் ஆயுதக்குவியல் இல்லை
மதுரையில் இருந்து வெடி குண்டு தடுப்பு மற்றும் அழிப்பு கண்காணிப்பு ஆய்வாளர் குணசேகரன் தலைமையில் வந்த 8 பேர் கொண்ட குழுவினர் செவ்வாய்க்கிழமை வெடிபொருள்களை ஆய்வு செய்தனர். மேலும் அந்த பகுதியில் இது போன்ற ஆயுத குவியல் உள்ளதா என தீவிரமாக ஆய்வு செய்தனர். இறுதியில் அந்த பகுதியில் மேலும் ஆயுதக் குவியல் இல்லை என்பதை குழுவினர் உறுதி செய்தனர். இதனையடுத்து, வெடி குண்டுகளை செயல் இழக்க வைக்க நடவடிக்கை எடுத்தனர். ஆனால் திருவாடானையில் இருந்து நீதிபதி வர தாமதம் ஆனதால் புதன்கிழமை காலையில் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனைதொடர்ந்து வெடி பொருள்கள் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.