தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு, கலவரம் தொடர்பாக தடயங்கள் சேகரிப்புப் பணியில் ஈடுபட்ட சிபிசிஐடி பிரிவு போலீஸார் அந்தப் பணியை செவ்வாய்க்கிழமை நிறைவு செய்தனர். தொடர்ந்து, துப்பாக்கிச்சூட்டின்போது போலீஸார் பயன்படுத்திய ஆயுதங்கள் புதன்கிழமை (ஜூன் 27) சிபிசிஐடி போலீஸாரிடம் ஒப்படைக்கப்படுகிறது.
தூத்துக்குடியில் கடந்த மாதம் 22 மற்றும் 23 ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும், அரசு மற்றும் தனியார் வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. பெட்ரோல் குண்டு வீசப்பட்டு பல இடங்களில் வன்முறை நிகழ்ந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக 5 பிரிவுகளாக வழக்குப் பதிந்த சிபிசிஐடி பிரிவு போலீஸார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சிபிசிஐடி பிரிவு கூடுதல் கண்காணிப்பாளர் மாரிராஜன் தலைமையில் கடந்த நான்கு நாள்களாக நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் தடயங்கள் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
வன்முறை நிகழ்ந்த விவிடி சிக்னல், அண்ணாநகர், பாளையங்கோட்டை சாலை, ஆட்சியர் அலுவலகம், ஸ்டெர்லைட் ஆலை குடியிருப்பு, திரேஸ்புரம் உள்ளிட்ட பகுதிகளில் சிபிசிஐடி பிரிவு போலீஸார் தடயங்கள் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு நான்காவது நாளான செவ்வாய்க்கிழமை நிறைவு செய்தனர்.
மேலும், சம்பவம் நடைபெற்று ஒரு மாதங்கள் நிறைவடைந்துவிட்டதால் சம்பவத்தன்று மாநகராட்சி நிர்வாகத்தால் சேகரிக்கப்பட்டு தருவைகுளம் பகுதியில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளிலும் சிபிசிஐடி பிரிவு போலீஸார் சோதனை மேற்கொண்டு தடயங்களை சேகரித்தனர்.
தற்போது தடயங்கள் சேகரிப்புப் பணி முடிவடைந்த நிலையில், துப்பாக்கிச்சூடு சம்பவத்தின்போது போலீஸார் பயன்படுத்திய ஆயுதங்களை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என சிபிசிஐடி பிரிவு போலீஸார் உத்தரவிட்டுள்ளனர். அதன்படி, ஆயுதங்களை போலீஸார் புதன்கிழமை (ஜூன் 27) ஒப்படைக்க உள்ளனர். தொடர்ந்து அடுத்தகட்ட விசாரணையை தொடங்க உள்ளதாக சிபிசிஐடி பிரிவு போலீஸார் தெரிவித்தனர்.
.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பள்ளி, கோயில், பேருந்து நிலையங்கள் அருகே மதுபானக் கடைகளை மூட வேண்டும்: அண்ணாமலை
கரூர் சம்பவத்திற்குப் பின்... முதல்வராக சாலை வலம் செல்லும் விஜய்!

கரூரில் முதல்வர் விஜய்! இன்றைய செய்திகள் ஜூலை 10 - நேரலை
கரூர் நெரிசலில் பலியானவர்களுக்கு நினைவுச் சின்னம்! முதல்வர் விஜய் அறிவிப்பு!
விடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | July 12 முதல் 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

ஃபிபா: ஆரம்பமாகிறது காலிறுதிச் சுற்று! | FIFA | FIFA World Cup |

MK Stalin உடன் மீண்டும் பேச்சா? குழப்பும் Thirumavalavan



