ஜெயா குழுமத்துக்குச் சொந்தமான 3 தொலைக்காட்சி சேனல்களுக்கு மத்திய அரசு பாதுகாப்பு அனுமதி அளிக்க மறுத்து பிறப்பித்த உத்தரவுக்கு தில்லி உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்யுமாறும் மத்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.
ஜெயா டிவி, ஜெயா பிளஸ், ஜெயா மேக்ஸ் ஆகியவற்றின் 80 சதவீத பங்குகள் சசிகலா வசம் உள்ளன. இந்நிலையில், அவர் சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றதைக் காரணம் காட்டி அந்தச் சேனல்களுக்கு பாதுகாப்பு அனுமதி வழங்குவதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் மறுப்பு தெரிவித்ததாகத் தெரிகிறது.
இந்நிலையில், அதை எதிர்த்து சசிகலா தரப்பில் தில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், அந்த மனு நீதிபதி ராஜீவ் சக்தேர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிடர் ஜெனரல் மணீந்தர் ஆச்சார்யாவும், ஜெயா டிவி தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் கோபால் சுப்ரமணியமும் தங்களது தரப்பு வாதங்களை எடுத்துரைத்தனர்.
அவற்றை கேட்டறிந்த நீதிபதி, ஜெயா டிவிக்குச் சொந்தமான 3 சேனல்களுக்கு பாதுகாப்பு அளிக்க மறுத்து பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிப்பதாகத் தெரிவித்தார். செப்டம்பர் 7-ஆம் தேதி இந்த வழக்கின் மீது அடுத்தகட்ட விசாரணை நடைபெறும் என்றும் அதுவரை இந்தத் தடை செல்லும் என்றும் அவர் கூறினார்.
அதற்குள் இந்த வழக்கில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







