பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

பசுமை வழிச் சாலை அமைக்க மக்களின் கருத்தறிய வேண்டும்: ஸ்டாலின்

சேலம் -சென்னை பசுமை வழிச் சாலைத் திட்டத்தை மக்களின் கருத்தைக் கேட்டறிந்த, பின்னரே செயல்படுத்த வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

News image
Updated On :29 ஜூன் 2018, 2:43 am IST

சேலம் -சென்னை பசுமை வழிச் சாலைத் திட்டத்தை மக்களின் கருத்தைக் கேட்டறிந்த, பின்னரே செயல்படுத்த வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
கொளத்தூர் தொகுதியில் மழைக் காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதைத் தவிர்க்கும் விதத்தில் மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணியை மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை தொடங்கி வைத்தார். 
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம் வகிப்பதாக வந்துள்ள ஆய்வறிக்கை பற்றி கேள்வி எழுப்புகிறீர்கள்.
பெண்களின் பாதுகாப்பு இன்றைக்கு எந்த நிலையில் இருக்கிறது என்பதை ஆதாரங்களோடும், புள்ளி விவரங்களோடும் தெளிவாக சட்டப்பேரவையில் சொல்லியிருக்கிறேன். ஆனால், அதற்கு பதிலுரை ஆற்றிய முதல்வர், அனைத்தையும் மூடி மறைக்கும் வகையில் இந்தக் குற்றங்கள் எல்லாம் குறைந்திருக்கிறது என்று கூறினாரே தவிர அதற்குரிய நடவடிக்கைகள் என்ன எடுக்கப்பட்டிருக்கிறது என்பதை அவரால் சொல்ல முடியவில்லை.
மிகப்பெரிய பொருளாதாரம் தரக்கூடிய ஒரு தொழிற்சாலையை முடக்குவது என்பது பொருளாதார தற்கொலை என்று ஜக்கி வாசுதேவ் கூறியிருப்பது பற்றி கேள்வி எழுப்புகிறீர்கள். தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவரும் ஒரு கருத்தைச் சொல்லலாம். ஆனால், பாதிக்கப்படுவது மக்கள்தான். அதனால், மக்களுடைய கருத்துகளைக் கேட்ட பிறகுதான் எந்தப் பணிகளாக இருந்தாலும் நடைமுறைப்படுத்த வேண்டும். ரூ.10,000 கோடி மதிப்பீட்டில் அறிவிக்கப்பட்டிருக்கும் சேலம் - சென்னை பசுமை வழிச்சாலைத் திட்டத்தையும் மக்களின் கருத்தைக் கேட்டறிந்த பிறகுதான் செயல்படுத்த வேண்டும் என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.