திருநெல்வேலி-கோவை, கோவை-செங்கோட்டைக்கு சிறப்புக் கட்டண ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில்களுக்கான முன்பதிவு வெள்ளிக்கிழமை (மார்ச் 2) தொடங்குகிறது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருநெல்வேலி - கோவைக்கு ஏப்ரல் 8-ஆம் தேதி முதல் ஜூலை 1-ஆம் தேதி வரை சனிக்கிழமைகளில் மாலை 6.20 மணிக்கு சிறப்புக் கட்டண ரயில் (06019) புறப்பட்டு, மறுநாள் காலை 4.30 மணிக்கு சென்றடையும்.
கோவை - திருநெல்வேலிக்கு ஏப்ரல் 11-ஆம் தேதி முதல் ஜூலை 4-ஆம் தேதி வரை புதன்கிழமைகளில் இரவு 11.50 மணிக்கு சிறப்புக் கட்டண ரயில் (06020) புறப்பட்டு, மறுநாள் காலை 8.35 மணிக்கு சென்றடையும்.
கோவை-செங்கோட்டை :
கோவை-செங்கோட்டைக்கு ஏப். 9-ஆம் தேதி முதல் ஜூலை 2-ஆம் தேதி வரை திங்கள்கிழமைகளில் இரவு 11.50 மணிக்கு சிறப்புக் கட்டண ரயில் (06021) புறப்பட்டு, மறுநாள் காலை 9.20 மணிக்கு சென்றடையும். செங்கோட்டை-கோவைக்கு ஏப்.10-ஆம் தேதி முதல் ஜூலை 3-ஆம் தேதி வரை செவ்வாய்க்கிழமைகளில் சிறப்புக் கட்டண ரயில் (06022) புறப்பட்டு, மறுநாள் காலை 4.30 மணிக்கு அடையும். இந்த ரயிலுக்கான முன்பதிவு வெள்ளிக்கிழமை (மார்ச் 2) தொடங்குகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.