தமிழாய்வுப் பெருவிழாவின் நிறைவு விழா, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் நிதியுதவியுடன் பாவேந்தர் பாரதிதாசன் இருக்கை தொடக்க விழா ஆகிய நிகழ்ச்சிகள், சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் வியாழக்கிழமை நடைபெற்றன.
முன்னதாக, தமிழாய்வுப் பெருவிழாவையொட்டி கடந்த இரண்டு மாதங்களாக 42 அறக்கட்டளைச் சொற்பொழிவுகள், 70 அரிய நூல்கள் வெளியீடு, திருக்குறள் முற்றோதல்ஆய்வரங்கம், மாணவர்களுக்குக் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் தமிழறிஞர்கள், ஆன்மிக சொற்பொழிவாளர்கள், பேராசிரியர்கள் கலந்துகொண்டு பேசினர். இதன் நிறைவு வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் பட்டிமன்ற பேச்சாளர் உமையாள் முத்து சிறப்புரையாற்றினார். தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் கோ.விசயராகவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.