பிரபல சித்த வைத்திய சாலையில் வருமான வரித்துறை சோதனை

சென்னையில் உள்ள பிரபல சித்த வைத்திய சாலையில் வருமான வரித்துறையினர் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனர்.
Updated on
1 min read

சென்னையில் உள்ள பிரபல சித்த வைத்திய சாலையில் வருமான வரித்துறையினர் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனர்.
சென்னை தியாகராய நகர், பாண்டிபஜார் ராஜபாதர் தெருவில் பிரபல சித்த வைத்திய சாலை செயல்படுகிறது. இந்த வைத்திய சாலையில் வருமான வரி ஏய்ப்பு செய்யப்படுவதாகவும், அதிகமான அளவு பணம் வங்கியில் இருப்பு வைத்திருப்பதாகவும் வருமான வரி துறைக்கு ஏராளமான புகார்கள் வந்தன.
அந்த புகார்களின் அடிப்படையில் வருமான வரித் துறையினர், அந்த சித்த வைத்திய சாலையில் வியாழக்கிழமை திடீரென சோதனை செய்தனர். இதேபோல் பெங்களூரு, மும்பை, தில்லி, திருவனந்தபுரம், ஹைதராபாத் போன்ற இடங்களில் உள்ள வைத்திய சாலையின் கிளைகளிலும் இச்சோதனை நடைபெற்றது. சென்னையில் மேலும் இரு இடங்களிலும் இச்சோதனை நடைபெற்றது. பல இடங்களில் இந்தச் சோதனை வியாழக்கிழமை இரவையும் தாண்டி நீடித்தது.
சோதனையில் வரி ஏய்ப்பு தொடர்பாக பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக வருமான வரித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். சோதனை முடிவடைந்த பின்னரே, வருமான வரி ஏய்ப்பு குறித்த முழுத் தகவல்கள் தெரியவரும் எனவும் அதிகாரிகள் கூறினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com