வீராணம் ஏரி நீர்மட்டம் சரிவு: சென்னைக்கு குடிநீர் வழங்குவதில் சிக்கல்
வீராணம் ஏரியின் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்து வருவதால், அடுத்த சில நாள்களுக்கு மட்டுமே சென்னைக்கு குடிநீர் அனுப்ப முடியும் என பொதுப் பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


வீராணம் ஏரியின் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்து வருவதால், அடுத்த சில நாள்களுக்கு மட்டுமே சென்னைக்கு குடிநீர் அனுப்ப முடியும் என பொதுப் பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவிலில் வீராணம் ஏரி உள்ளது. இதன் நீர்மட்டம் 47.50 அடியாகும் (1,465 மில்லியன் கன அடி). ஏரி வெட்டப்பட்ட காலத்தில் 1.44 டி.எம்.சி. தண்ணீர் சேமிக்கப்பட்டது. தற்போது, ஏரி தூர்ந்துபோய் அதன் கொள்ளளவு 0.96 டி.எம்.சி. ஆக சுருங்கிவிட்டது. இந்த ஏரியின் மூலம் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும், ஏரியிலிருந்து சென்னை நகருக்கு தினமும் விநாடிக்கு 72 கன அடி நீர் விநியோகிக்கப்படுகிறது.
மேட்டூர் அணையிலிருந்து பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீர் கல்லணை வழியாக கீழணையை வந்தடைந்து, அதிலிருந்து வடவாற்றில் திறக்கப்பட்டு வீராணம் ஏரியை வந்தடைகிறது. 2017-ஆம் ஆண்டு, அக்டோபர் 26-இல் கீழணையிலிருந்து ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் படிப்படியாகத் தேக்கப்பட்டு, நவம்பர் 8-ஆம் தேதி சென்னை நகருக்கு குடிநீர் அனுப்பும் பணியை பொதுப் பணித் துறையினர் மீண்டும் தொடங்கினர். மேலும், ஏரியைச் சார்ந்த பாசனப் பகுதிகளுக்காக அக்டோபர் 10-ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. கடந்த ஜனவரி மாதம் கீழணையிலிருந்து வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. போதிய பருவ மழை இல்லாததால் இந்த ஏரி தனது முழு கொள்ளளவை கடந்த ஆண்டு எட்டவில்லை. ஏரியின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால், சென்னைக்கு அனுப்பப்படும் குடிநீரின் அளவை தற்போது குறைத்து வருகின்றனர்.
தற்போது ஏரியின் நீர் மட்டம் 40.20 அடியாக (111 மில்லியன் கன அடி) உள்ளது. இதிலிருந்து சென்னை நகரின் குடிநீர்த் தேவைக்கு தற்போது விநாடிக்கு 68 கன அடி வீதம் தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. சென்னைக்கு அதிகபட்சமாக விநாடிக்கு 72 கன அடி நீரும், குறைந்தபட்சமாக விநாடிக்கு 19 கன அடி நீரும் அனுப்ப முடியும். ஏரியின் நீர்மட்டம் மிக விரைவாகக் குறைந்து வருவதால், அடுத்த சில நாள்களுக்கு மட்டுமே இங்கிருந்து சென்னைக்கு குடிநீர் வழங்க முடியும் என பொதுப் பணித் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...