என் சிந்தனை வளர்ந்த வீடு: பெரியார் நினைவு இல்லத்தில் கமல் உருக்கம்! 

என் சிந்தனை வளர்ந்த வீடு இது என்று ஈரோட்டில் அமைந்துள்ள  பெரியார் நினைவு இல்லத்தினைப் பார்வையிட்ட பிறகு விருந்தினர் குறிப்பேட்டில் நடிகர் கமல் உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.

Published On :30 ஜனவரி 2024, 5:57 pm IST

ஈரோடு: என் சிந்தனை வளர்ந்த வீடு இது என்று ஈரோட்டில் அமைந்துள்ள  பெரியார் நினைவு இல்லத்தினைப் பார்வையிட்ட பிறகு விருந்தினர் குறிப்பேட்டில் நடிகர் கமல் உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தற்பொழுது ஈரோட்டில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். தனது சுற்றுபயணத்தின் ஒருபகுதியாக, ஈரோட்டில் அமைந்துள்ள  பெரியார் நினைவு இல்லத்தினை அவர் ஞாயிறு காலை பார்வையிட்டார்.

அப்பொழுது அங்கு பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள பெரியார் பயன்படுத்திய பொருட்களை பார்வையிட்டார். பின்னர் அங்குள்ள விருந்தினர் பதிவேட்டில் அவர், “என் சிந்தனை வளர்ந்த வீடு இது, அவர் சிந்தனை இங்கே வளர்ந்த காரணத்தினால் - அன்புடன் கமல்ஹாசன்” என எழுதி கையெழுத்திட்டார்.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.