
சென்னை: சென்னையில் உள்ள மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் வீட்டிற்கு நடிகர் அஜித் மற்றும் அவரது மனைவி ஷாலினி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
உறவினர் ஒருவரது திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள துபாய் சென்ற நடிகை ஸ்ரீதேவி எதிர்பாராவிதமாக மரணம் அடைந்தார்.பின்னர் நடைபெற்ற விசாரணையில் தான் தங்கி இருந்த நட்சத்திர ஓட்டலில் உள்ள குளியலறை தொட்டியில் நீரில் மூழ்கி ஸ்ரீதேவி இறந்ததாக பிரதேச பரிசோதனையில் தெரியவந்தது.
பின்னர் தனி விமானம் மூலம் இந்தியா கொண்டுவரப்பட்ட ஸ்ரீதேவியின் உடல், மும்பையில் ரசிகர்களின் அஞ்சலிக்குப் பின்னர் எரியூட்டபட்டது.
இந்நிலையில் ஸ்ரீதேவியின் 16-ஆவது நாள் மரண சடங்குகள் சென்னை சிஐடி நகரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று வருகிறது. இதில் தமிழ்த் திரையுலகினர் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அதிலொருவராக நடிகர் அஜித் தனது மனைவி ஷாலினியுடன் வந்து அஞ்சலி செலுத்தியுள்ளார். பின்னர் ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் மற்றும் அவர்தம் குடும்பத்ததாருக்கு அவர்கள் ஆறுதல் கூறினார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.