இன்று தமிழகத்தை அடைகிறது கா்நாடக அணை காவிரி நீா்!தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்: முக்கிய அறிவிப்புகள் வெளியாகின்றனஇந்தியப் பொருளாதாரம் 7.7% வளா்ச்சி!தமிழகத்தில் ஆக. 9 வரை மழைக்கு வாய்ப்புஉறுப்பு மாற்று சிகிச்சையில் தமிழகம் முதலிடம்!
/

வரி ஏய்ப்பு புகார்: தி.நகர் வசந்த் & கோ, சரவணா ஸ்டோர்ஸ் மற்றும் ஹாட் சிப்ஸ் நிறுவனங்களில் சோதனை! 

வரி ஏய்ப்பு செய்து வருவதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து தி.நகர் வசந்த் & கோ, சரவணா ஸ்டோர்ஸ் மற்றும் ஹாட் சிப்ஸ் நிறுவனங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

News image
Updated On :30 ஜனவரி 2024, 6:05 pm IST

சென்னை: வரி ஏய்ப்பு செய்து வருவதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து தி.நகர் வசந்த் & கோ, சரவணா ஸ்டோர்ஸ் மற்றும் ஹாட் சிப்ஸ் நிறுவனங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

தியாகராய நகர் சென்னையின் பரபரப்பான வர்த்தக பகுதிகளில் ஒன்று. அங்கு பிரபல துணிக்கடைகள், நகைக்கடைகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்களை விற்கும் கடைகள் அமைந்துள்ளன.

இந்நிலையில் வரி ஏய்ப்பு செய்து வருவதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து தி.நகரில் அமைந்துள்ள  வசந்த் & கோ, சரவணா ஸ்டோர்ஸ் மற்றும் ஹாட் சிப்ஸ் நிறுவனங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

ஜி.எஸ்.டி புலனாய்வு பிரிவு அதிகாரிகள் இந்த சோதனையை நடத்தி வருகின்றனர். இந்த நிறுவனங்கள் தொடர்ந்து வரி ஏய்ப்பு செய்து வருவதாக புகார்கள் வந்த வண்ணம் இருந்ததால் இந்த சோதனை நடைபெறுவதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.