முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஏப்ரல் 6, 7 தேதிகளில் அரசு மருத்துவர்கள் 5 பேரிடம் சசிகலா தரப்பு வழக்குரைஞர்கள் குறுக்கு விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் தனிநபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்துள்ளது.
இந்த விசாரணை ஆணையத்தில் ஜெயலலிதா, சசிகலாவின் உறவினர்கள், முன்னாள் தலைமைச் செயலர்கள், காவல் துறை அதிகாரிகள், அரசு மருத்துவர்கள், ஜெயலலிதாவின் உதவியாளர்கள், அவரது வீட்டில் பணிபுரிந்தவர்கள் என இதுவரை 25-க்கும் மேற்பட்டோர் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர்.
சசிகலா தரப்பு பிரமாணப் பத்திரம் தாக்கல்: அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பும், அதற்குப் பின்பும் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விசாரணை ஆணையத்தில் சசிகலா அண்மையில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தார்.
மேலும், ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலாவுக்கு எதிராகப் புகார் அளித்தவர்கள், சிகிச்சை அளித்த மருத்துவர்களிடம் குறுக்கு விசாரணை செய்ய ஆணையம் அனுமதி அளித்தது.
5 அரசு மருத்துவர்களிடம் குறுக்கு விசாரணை: இதையடுத்து, அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அரசு சார்பில் மருத்துவக் குழுவை அமைத்த அப்போதைய மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் விமலாவும், அதன் பின் மருத்துவக் கல்வி இயக்குநராகப் பொறுப்பு வகித்தவரும், தற்போது ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் டீனாகப் பணியாற்றி வருபவருமான டாக்டர் நாராயணபாபு ஆகியோரிடம் சசிகலா தரப்பு வழக்குரைஞர்கள் செவ்வாய்க்கிழமை குறுக்கு விசாரணை மேற்கொண்டனர்.
இதைத் தொடர்ந்து, ஜெயலலிதாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகளைக் கண்காணிக்க அரசு சார்பில் அமைக்கப்பட்டிருந்த குழுவில் இடம் பெற்றிருந்த அரசு மருத்துவர்கள் 5 பேரிடம் ஏப்ரல் 6, 7 தேதிகளில் விசாரணை நடத்த உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

என்ஜினீயா் வீட்டில் நகைகள் திருட்டு

11.4.1976: பொது பணத்தில் நிறுவிய பாலம், கல்வி சாலைகளின் தனியார் பெயர்களை நீக்க த.நா. அரசு முயற்சி

பேரவைத் தோ்தல் முன்னேற்பாடுகள் மாவட்டக் காவல் பாா்வையாளா் ஆய்வு

அதிமுக ஆட்சி அமைந்தவுடன் வெண்ணைமலை கோயில் நிலப் பிரச்னைக்கு தீா்வு: அண்ணாமலை பேச்சு
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

