லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

பாம்பன் பாலத்தில் ரயில்வே தலைமைப் பொறியாளர் ஆய்வு

பாம்பன் ரயில் பாலத்தில் செல்லும் ரயில்களின் வேகத்தை அதிகரிப்பது தொடர்பாக தெற்கு ரயில்வே தலைமைப் பொறியாளர் ஏ.கே. கத்பால் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டார். 

News image
Updated On :29 மார்ச் 2018, 8:06 pm

பாம்பன் ரயில் பாலத்தில் செல்லும் ரயில்களின் வேகத்தை அதிகரிப்பது தொடர்பாக தெற்கு ரயில்வே தலைமைப் பொறியாளர் ஏ.கே. கத்பால் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டார். 
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் இருந்து ராமேசுவரம் தீவுப் பகுதியை இணைக்கும் வகையில் ரயில் பாலம் கடந்த 1914 ஆண்டு அமைக்கப்பட்டு ரயில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. 
இந்நிலையில், கடந்த 2006-ம் ஆண்டு முதல் மீட்டர் கேஜ் பாதை அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டு ரயில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது
ராமேசுவரம் வரும் ரயில்கள் அனைத்தும் பாம்பன் ரயில் பாலத்தில் 10 முதல் 20 கி. மீ. வேகத்தில் மட்டுமே செல்லுகின்றன. இதனால் பாம்பன் ரயில் பாலத்தில் செல்லும் ரயில்களின் வேகத்தை அதிகரிக்க தொடர்ந்து தெற்கு ரயில்வே பொறியாளர்கள் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், தெற்கு ரயில்வே தலைமைப் பொறியாளர் ஏ.கே. கத்பால் வியாழக்கிழமை பாம்பன் ரயில் பாலத்தில் செல்லும் ரயில்களின் வேகத்தை அதிகரிப்பது குறித்தும், பாலத்தின் தரம் குறித்தும் ட்ராலியில் சென்று ஆய்வு மேற்கொண்டார். மேலும், இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான சிறிய ரக கப்பலில் சென்றும் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வுப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் விரைவில் ரயில்களின் வேகம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக அதிகாரி ஒருவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.