மக்களை பாதிக்கும் எந்தத் திட்டத்தையும் தமிழக அரசு நிறைவேற்றாது என சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் தெரிவித்தார்.
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
மூத்த அமைச்சர்கள், துறை அதிகாரிகளோடு ஸ்டெர்லைட் ஆலை குறித்து முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வியாழக்கிழமை ஆய்வு நடத்தியுள்ளார். இதில், தமிழக மக்கள் பாதிக்காத வகையில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் ஒதுக்கியுள்ள ரூ.100 கோடி நிதியிலிருந்து ரூ.35 கோடி மக்கள் பிரச்னை தீர்வுக்கு பயன்படுத்தப்படும்.
அதேபோல், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டங்களுக்கு தமிழக அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதி இதுவரை அளிக்கப்படவில்லை. இதுதொடர்பாக அமைக்கப்பட்டுள்ள குழுவின் பரிந்துரைபடி முதல்வர் நடவடிக்கை எடுப்பார். மக்களை பாதிக்கும் எந்தத் திட்டத்தையும் தமிழக அரசு நிறைவேற்றாது என்றார் அமைச்சர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நலத்திட்டங்கள் தொடர திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும்: சிவ.வீ.மெய்யநாதன்

ஜாதி, மத கலவரத்தை தூண்டி வாக்கு வங்கியை உயா்த்த பாஜக முயற்சி: திருச்சி எம்பி துரை வைகோ

6,063 முதியவா்கள், மாற்றுத்திறனாளிகள் அஞ்சல் வாக்குப் பதிவு: தஞ்சை ஆட்சியா் தகவல்

தொகுதி மறுசீரமைப்பை காங்கிரஸ் நிறைவேற்ற விடாது: ஆனந்த் சீனிவாசன்
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


