கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புகொல்கத்தாவில் நாளைமுதல் 60 நாள்களுக்கு தடை உத்தரவுலண்டனில் இருந்து தாயகம் திரும்பிய 104.23 மெட்ரிக் டன் தங்கம்!தொடர் விடுமுறை: 2 நாள்களில் 2.13 லட்சம் போ் அரசுப் பேருந்துகளில் பயணம்!மேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்வேன்: பன்னீர்செல்வம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்வேன் என்று பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

News image
Updated On :29 மார்ச் 2018, 6:58 am

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்வேன் என்று பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான உச்ச நீதிமன்ற இறுதித் தீர்ப்பில் 6 வார காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என தெரிவித்திருந்தது.

உச்சநீதிமன்றம் விதித்த கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. இவ்விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு பல்வேறு தரப்பினர் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். 

இந்தநிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்வேன் என்று கலசப்பாக்கம் எம்.எல்.ஏ பன்னீர்செல்வம் தெரிவித்தார். தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு கூறினார். 

முன்னதாக காவிரி மேலாண்மை விவகாரத்தில் தற்கொலை செய்யயும் தயார் என அதிமுக எம்பி நவநீதகிருஷ்ணன் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.