காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, திண்டுக்கல்லில் வியாழக்கிழமை செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ் தேசியக் கட்சியைச் சேர்ந்த 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து, திண்டுக்கல் நாகல்நகர் பகுதியில் உள்ள செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறி, தமிழ் தேதியக் கட்சி நிர்வாகிகள் 6 பேர் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மத்திய அரசுக்கு எதிராகவும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும் அவர்கள் கோஷமிட்டனர்.
தகவலறிந்த திண்டுக்கல் வடக்கு காவல் நிலைய போலீஸார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனை ஏற்று கீழே இறங்கிய அக்கட்சியின் நிர்வாகிகள் ஆறுமுகம், ஜோசப் சந்தியாகு, முனியாண்டி, பாக்யராஜ், முத்துப்பாண்டி, லட்சுமணன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதனால் ரவுண்ட்ரோடு பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருவண்ணாமலை கிரிவலம் சென்றிருப்போர் கவனத்துக்கு..

வணிக சிலிண்டர் விலை உயர்வு! மோடி அரசுக்கு பணம் பறிக்க மட்டுமே தெரியும்: காங்கிரஸ்
முறைகேடு புகார்: வாக்குப்பெட்டி அறையில் 4 மணி நேரம் இருந்த மமதா பானர்ஜி!

புத்த பூர்ணிமா வழிபாடு!
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு


