மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

மணல் கடத்தலுக்கு உடந்தையாக இருக்கும் அரசு அதிகாரிகள் மீது குண்டர் சட்டம்: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு 

மணல் கடத்தலுக்கு உடந்தையாக இருக்கும் அரசு அதிகாரிகள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. 

News image
Updated On :8 மே 2018, 11:50 am

சென்னை: மணல் கடத்தலுக்கு உடந்தையாக இருக்கும் அரசு அதிகாரிகள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. 

மணல் கடத்தலில் ஈடுபட்ட லாரி ஓட்டுநர் ஒருவர் மீது அவசர கதியில் பாய்ச்சப்பட்ட குண்டர் சட்டம் பற்றிய வழக்கு ஒன்று, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சுப்பிரமணியன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது   நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:

மணல் கடத்தலில் ஈடுபட்ட குறிப்பிட்ட லாரி ஓட்டுநர் மீது போதிய தெளிவு இன்றி குண்டர் சட்டம் பாய்ச்சப்பட்டுள்ளது. ஆனால் அரசு அதிகாரிகள் ஒத்துழைப்பு இன்றி மணல் கடத்தல் நடைபெற முடியாது. அப்படியென்றால் மணல் கடத்தலுக்கு உதவிய அரசு அதிகாரிகள்மீது இதுவரை என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது?

இனி மணல் கடத்தலுக்கு உடந்தையாக இருப்பவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கலாம். அவர்கள் அரசு அதிகாரிகளாக இருந்தாலும் சரி, அவர்கள் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கலாம்.

இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.