தேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!தமிழ்நாட்டை ஆளும் கட்சியாக விசிக மாறும்! மாநாட்டில் திருமாவளவன் பேச்சுவிசிகவும் தவெகவும் இனி இணைந்தே பயணிக்கும்: திருமாவளவன்சுதந்திர நாளன்று மிகப்பெரிய சதி முறியடிப்பு! ஐஎஸ்ஐ தொடர்புடைய 253 பயங்கரவாதிகள் கைது! ராகுல் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு! சிபிஐ விசாரணையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!
/

டாக்டர் வா.செ.குழந்தைசாமி விருதுக்கு ஆய்வு நூல்கள் வரவேற்பு

டாக்டர் வா.செ. குழந்தைசாமி கல்வி ஆய்வு அறக்கட்டளை சார்பில் வழங்கப்படும் தமிழ் மேம்பாட்டு விருதுக்கு ஆய்வு நூல்கள் வரவேற்கப்படுகின்றன.

Updated On :30 ஜனவரி 2024, 6:30 pm IST

டாக்டர் வா.செ. குழந்தைசாமி கல்வி ஆய்வு அறக்கட்டளை சார்பில் வழங்கப்படும் தமிழ் மேம்பாட்டு விருதுக்கு ஆய்வு நூல்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுதொடர்பாக டாக்டர் வா.செ.குழந்தைசாமி கல்வி ஆய்வு அறக்கட்டளையின் தலைவர் ப.தங்கராசு வெளியிட்டுள்ள அறிக்கை: கரூரில் டாக்டர் வா.செ. குழந்தைசாமி கல்வி ஆய்வு அறக்கட்டளை கடந்த 20 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த அறக்கட்டளை மூலம் கடந்த இரு ஆண்டுகளாக (2016, 2017) தமிழ் மேம்பாட்டு விருதுகள் வழங்கப்படுகிறது.
தொல்லியல், கல்வெட்டியல், நாணவியல், அகழாய்வு, மொழிச் சீர்திருத்தம், சமுதாய சீர்திருத்தம், முன்னேற்ற சிந்தனை கொண்ட முத்தமிழ் படைப்புகள், அகராதிகளில் இடம்பெறாத புதிய சொற்களின் தொகுப்புகள் ஆகிய தலைப்புகளில் அனுப்பப்படும் நூல்களுக்கு விருது வழங்கப்படும். விருதுபெற நூல்கள் மற்றும் நூல்களின் பரிந்துரைகள் 2 பிரதிநிதிகள் அனுப்ப வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் படைப்புக்கு விருதுடன் ரூ.20,000 பண முடிப்பு வழங்கப்படும். விருது வழங்கும் நாள் கரூரில் புத்தகத் திருவிழா நடைபெறும் நாட்களில் அறிவிக்கப்படும். அனுப்பப்படும் நூல் 2017 ஆண்டின் படைப்பாக இருக்க வேண்டும். நூலை வரும் 30 ஆம் தேதிக்குள் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும். முகவரி: ப.தங்கராசு, தலைவர், டாக்டர் வா.செ.குழந்தைசாமி கல்வி ஆய்வு அறக்கட்டளை, 5/45, எல்.ஆர்.ஜி.நகர், ஆண்டாங்கோவில் கீழ்பாகம், கரூர்-639 008. மேலும் விவரங்களுக்கு, 99524 22179.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.