நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்ஜார்க்கண்ட்டில் மாணவர்கள் மீதான வன்முறை தவறானது: ராகுல் காந்திஜார்க்கண்ட் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் மீது தடியடி! மாணவர்கள் கொந்தளிப்பு நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு வந்தால் பதிலடி கொடுக்கப்படும்: ராகுலுக்கு ஜெ.பி. நட்டா சவால்!ஜார்க்கண்ட்: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது தடியடி! மருத்துவ தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் மாணவர் 5, மாணவிகள் 5 பேரும் இடம் பிடித்துள்ளனர்: சுகாதாரத் துறைமருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவு!
/

பட்டிமன்ற நடுவர் அறிவொளி உடல் தகனம்

உடல்நலக்குறைவால் காலமான பட்டிமன்ற நடுவர் டாக்டர் அ. அறிவொளி உடல் புதன்கிழமை திருச்சி ஓயாமரி மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

Updated On :30 ஜனவரி 2024, 6:30 pm IST

உடல்நலக்குறைவால் காலமான பட்டிமன்ற நடுவர் டாக்டர் அ. அறிவொளி உடல் புதன்கிழமை திருச்சி ஓயாமரி மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
நாகை மாவட்டம், சிக்கலைச் சேர்ந்தவர் டாக்டர் அ. அறிவொளி (80). சிறந்த தமிழறிஞரான இவர் பட்டிமன்ற நடுவராகவும், ஆன்மிக இலக்கியச் சொற்பொழிவாளராகவும் திகழ்ந்து வந்தார். திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகிலுள்ள ஹனிபா காலனியில் மனைவி, 2 மகன்கள், 2மகள்களுடன் வசித்து வந்தார்.
வயது முதுமை மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அறிவொளி செவ்வாய்க்கிழமை இரவு காலமானார். ஹனிபா காலனியிலுள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு நாவுக்கரசர் சோ. சத்தியசீலன், பட்டிமன்றப் பேச்சாளர் ராஜா, பேராசிரியர் தா.கு. சுப்பிரமணியன், முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, திருவண்ணாமலை திருவள்ளுவர் கழகத்தின் கண்ணன், அருணகிரிநாதர் கழகத்தின் தனுஷ், கவிஞர் நந்தலாலா, பேராசிரியர் மாணிக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர், உறவினர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். பட்டிமன்ற நடுவர் சாலமன்பாப்பையா தொலைபேசி மூலம் அறிவொளியின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்தார்.
புதன்கிழமை மாலை ஹனிபா காலனியிலுள்ள அவரது இல்லத்திலிருந்த புறப்பட்ட இறுதி ஊர்வலம் ஓயாமரி மின் மயானத்தை அடைந்தது. அங்கு அறிவொளியின் உடலுக்கு மூத்த மகன் நச்சினார்க்கினியன் இறுதிச்சடங்கு செய்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.