மலையாளச் சொந்தங்களுக்கு இதயங்கனிந்த ஓணம் வாழ்த்துகள்! முதல்வர் விஜய்‘மகாபலியின் மண்ணில் சமத்துவம் மலரட்டும்: மனமார்ந்த ஓணம் வாழ்த்துக்கள்!’ - மு.க.ஸ்டாலின்குழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிநாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறை

காமராஜர் பல்கலை. வெளி வளாக வகுப்புத் திட்டத்துக்கு இடைக்கால தடை

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் வெளி வளாக வகுப்புத் திட்டத்துக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

Published On :30 ஜனவரி 2024, 6:30 pm IST

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் வெளி வளாக வகுப்புத் திட்டத்துக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்த ஓய்வுபெற்ற பேராசிரியர் எம்.ஆனந்தகிருஷ்ணன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது. மனு விவரம்: திருநெல்வேலியில் உள்ள மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 2008 -இல் பல்கலைக்கழக பாடங்களை தனியார் மூலம் நடத்துவதற்கு வகைசெய்யும் வெளி வளாக வகுப்புத் திட்டம் (சேட்டிலைட் ரெகுலர் அகாடமி புரோகிராம்) அறிமுகம் செய்யப்பட்டது. 
இத்திட்டத்துக்கு 2012 -இல் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் 2018 -19 -ஆம் கல்வியாண்டில் வெளி வளாக வகுப்புத் திட்டத்துக்கு அனுமதி வழங்கப்படுவதாக பிப்ரவரி 5 -இல் அறிவிப்பாணை வெளியிடப்பட்டது.
இந்த திட்டப்படி தனி நபர்கள் யார் வேண்டுமானாலும் விண்ணப்பக் கட்டணம் ரூ.10 ஆயிரம், பதிவு கட்டணமாக ரூ.50 ஆயிரம் செலுத்தி பல்கலைக்கழகம் வழங்கும் 134 பாடங்களையும் நடத்த முடியும். இப்படிப்புகளுக்கு பல்கலைக்கழகம் தேர்வு நடத்தி சான்றிதழ் வழங்கும். இத்திட்டத்தின்படி, கல்வி நிறுவனம் நடத்துவோர் மாணவர்களிடம் இருந்து வசூலிக்கும் கல்வி கட்டணத்தில் 40 சதவீதத்தை பல்கலைக்கழகத்துக்கு வழங்க வேண்டும்.
இந்தக் கல்வித் திட்டம் பல்கலைக்கழக மானியக்குழு விதிகளுக்கு எதிரானது. கல்வி நிறுவனம் நடத்த அனுமதி வழங்குவது என்றால் அதற்கு குறிப்பிட்ட அளவு இடம், தனி நிர்வாகக் குழு, அடிப்படை கட்டமைப்பு வசதிகள், விளையாட்டு மைதானம், ஆய்வகம் போன்றவை இருக்க வேண்டும். இவைகளை ஆய்வு செய்த பிறகே கல்வி நிறுவனம் நடத்த அனுமதி வழங்க வேண்டும். கல்வி நிறுவனங்களின் பாடப்பிரிவுகள் தொடங்க அனுமதி வழங்குவது, கண்காணிப்பது ஆகியன தான் பல்கலைக்கழகத்தின் பணி. மாறாக மாணவர்களிடம் வாங்கும் கட்டணத்தில் பங்கு பெறுவது பல்லைக்கழகத்தின் விதிகளுக்குப் புறம்பானது. இது கல்வியை வியாபாரமாக்கும் நோக்கமாகும். மாணவர்களிடம் இருந்து அதிக அளவில் பணம் பறிக்கப்பட வாய்ப்புள்ளது. 
எனவே மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் வெளி வளாக வகுப்புத் திட்டத்தை தொடங்குவதற்கு தடை விதித்து, இதுதொடர்பான அறிவிப்பாணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் எம்.கோவிந்தராஜ், ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், காமராஜர் பல்கலை.யின் வெளி வளாக வகுப்புத் திட்டத்துக்கு இடைக்கால தடை விதித்து, விசாரணையை ஜூன் மாதத்துக்கு ஒத்திவைத்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.