மலையாளச் சொந்தங்களுக்கு இதயங்கனிந்த ஓணம் வாழ்த்துகள்! முதல்வர் விஜய்‘மகாபலியின் மண்ணில் சமத்துவம் மலரட்டும்: மனமார்ந்த ஓணம் வாழ்த்துக்கள்!’ - மு.க.ஸ்டாலின்குழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிநாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறை

எழும்பூரிலிருந்து அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களும் வழக்கம் போல் இயக்கம்! இன்று முதல்?

எழும்பூரிலிருந்து அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களும் வழக்கம்போல் இயக்கப்படவுள்ளதைப் பற்றி...

எழும்பூர் ரயில் நிலையம். - @RailMinIndia

Published On :26 ஆகஸ்ட் 2026, 9:36 am IST

எழும்பூரிலிருந்து அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களும் இன்று (ஆக. 26) முதல் வழக்கம்போல் இயக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னையின் மிகவும் பரபரப்பான ரயில்நிலையமான எழும்பூர் ரயில் நிலையத்தில் ரூ.842 கோடி மதிப்பீட்டில் மறுசீரமைப்பு பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் வருகை மற்றும் புறப்பாடு முனையங்கள், மின்தூக்கிகள் (லிஃப்ட்), நகரும் படிக்கட்டுகள் உள்ளிட்ட அதிநவீன உள்கட்டமைப்பு வசதிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

எழும்பூரில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணி காரணமாக மெட்ரோவிலிருந்து வெளியே வரும் பயணிகளில் வழியும் மாற்றம் செய்யப்பட்டு வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதன் 2-ஆம் கட்​ட​மாக, புதிய நடைமேடை அமைக்கும் பணி​கள் கடந்த ஜூலை முதல் நடை​பெறுகின்​றன.

சீரமைப்பு பணிகள் காரணமாக குறிப்பிட்ட சில மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் சில எக்ஸ்பிரஸ் ரயில்கள் தற்காலிகமாக தாம்பரம் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டு வந்தன.

ஆக.20 முதல் ஆக.24 வரை எழும்பூருக்கு வந்த தஞ்சாவூர் விரைவு ரயில் (எண்: 16866), மங்களூரு விரைவு ரயில் (எண்: 16160), கொல்லம் அனந்தபுரி அதிவிரைவு ரயில் (எண்: 20636) ஆகிய ரயில்கள் தாம்பரத்துடனும், திருச்சியில் இருந்து வரும் ராக்போர்ட் விரைவு ரயில் (எண்:12654) மாம்பலத்துடனும் நிறுத்தப்பட்டன.

இந்த நிலையில், தாம்பரத்தில் இருந்து இயக்கப்பட்டு வரும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் வழக்கம் போல் இன்று (புதன்கிழமை - ஆக. 26) முதல் எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பயணிகள் எவ்வித சிரமமும் இன்றி சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்தே தங்களது பயணங்களை வழக்கமான அட்டவணைப்படி தொடரலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இன்று பயணம் மேற்கொள்ளும் பயணிகள் தங்களின் பயணத்துக்கு முன்பாக ரயில் புறப்படும் இடத்தை உறுதி செய்துகொள்ளவும் அறிவுறுத்தப்படுகின்றனர்.

Summary

Reports indicate that all express trains from Egmore will operate as usual starting today (August 26).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.