கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புஎம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு: கல்லூரிகள் தோ்வு இன்று நிறைவுவீடுகளில் எல்பிஜிக்கு பதிலாக குழாய்வழி சமையல் எரிவாயு: மாநிலங்கள் முன்னுரிமை அளிக்க மத்திய அரசு வலியுறுத்தல்எத்தனால் உற்பத்தி அதிகரிப்பால் சா்க்கரை விலை உயா்வு: மத்திய அரசு மீது மாா்க்சிஸ்ட் குற்றச்சாட்டுஆபரேஷன் சிந்தூா் எதிரொலி: விசா சிக்கல்களுக்குப் பிறகு இந்தியா வந்தடைந்த 150 பாகிஸ்தான் மணப்பெண்கள்!

கூட்டுறவு சங்கத் தேர்தல் முறைகேடு: நடவடிக்கைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

கூட்டுறவு சங்கத் தேர்தலில் முறைகேட்டில் ஈடுபடும் அதிகாரிகள் மீது தேர்தல் நன்னடத்தை விதிகள், துறை ரீதியான மற்றும் குற்றவியல் நடவடிக்கைகளின் கீழ் நடவடிக்கை எடுக்க

Published On :30 ஜனவரி 2024, 6:30 pm IST

கூட்டுறவு சங்கத் தேர்தலில் முறைகேட்டில் ஈடுபடும் அதிகாரிகள் மீது தேர்தல் நன்னடத்தை விதிகள், துறை ரீதியான மற்றும் குற்றவியல் நடவடிக்கைகளின் கீழ் நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
சென்னை புதுப்பேட்டை கூட்டுறவு சங்கம், சென்னை மாநகர போக்குவரத்துத் தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கம் உள்ளிட்டவைகளுக்கான தேர்தலில் ஏராளமான முறைகேடுகள் நடப்பதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் பலர் வழக்குத் தொடர்ந்தனர். தேர்லின்போது போலி வாக்காளர் அட்டைகளைத் தயாரித்து, பலர் கள்ள ஓட்டு போட்டதாகவும், கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர் இல்லாதவர்களைக் கொண்டு தேர்தல் நடத்தப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டன.
இந்த வழக்கை விசாரித்த விடுமுறைக்கால நீதிமன்ற அமர்வு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தலை நடத்தும் மாநிலத் தேர்தல் ஆணையர் ராஜேந்திரன் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை பிற்பகலுக்கு ஒத்திவைத்தார்.
சட்டத்துக்குட்பட்டுத்தான்...இந்த வழக்கு பிற்பகல் விசாரணைக்கு வந்தபோது, ஆணையர் ராஜேந்திரன் ஆஜராகவில்லை. கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையத்தின் கூடுதல் செயலாளர் வாசுகி ஆஜரானார். 
கூட்டுறவு சங்கத் தேர்தல் ஆணையத்தின் சார்பில் கூடுதல் அரசு தலைமை வழக்குரைஞர் பி.எச்.அரவிந்த் பாண்டியன் ஆஜராகி, கூட்டுறவுசங்கத் தேர்தலில் சட்டத்துக்குட்பட்டுத்தான் தேர்தல் ஆணையம் செயல்படுகிறது. எந்தவிதமான முறைகேடுகளும் நடைபெறவில்லை. தேர்தல் விதிகளுக்குட்பட்டு உரிய நடவடிக்கைகள் உடனுக்குடன் எடுக்கப்படுகிறது என வாதிட்டார். மனுதாரர்கள் தரப்பில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. 
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் பிறப்பித்த உத்தரவு: ''அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்வதில் கூட்டுறவு சங்கங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஏழை மக்களுக்காக உருவாக்கப்பட்ட இச்சங்கங்கள் அழியும் நிலையில் உள்ளன. சங்கங்களை மேம்படுத்த வேண்டும். கூட்டுறவு சங்கத் தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் நடக்கின்றன.
அதிகாரிகள் மீது நடவடிக்கை: இந்த முறைகேடுகளில் அதிகாரிகள் ஈடுபடுவதாகவும், திகளை மீறி சட்ட விரோதமாகச் செயல்படுவதாகவும் மனுதாரர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது. 
இதுபோன்ற முறைகேடுகளில் ஈடுபடும் தேர்தல் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த அதிகாரிகள் மீது, தேர்தல் நன்னடத்தை விதிகளின்படி, குற்றவியல் நடவடிக்கை, துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
எனவே, கூட்டுறவு சங்கத் தேர்தலில் நடந்த முறைகேடுகளால் பாதிக்கப்பட்டவர்கள், கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தலை நடத்தும் ஆணையத்திடம் புதிய புகாரை உடனே கொடுக்கவேண்டும். அ
ந்தப் புகாரைப் பெற்றுக் கொண்ட பின்னர், தேர்தல் ஆணையம் வெளிப்படையான, நேர்மையான விசாரணையை மேற்கொள்ள வேண்டும். இந்தப் புகார் குறித்து இரண்டு மாத காலத்துக்குள் தேர்தல் ஆணையர் நடவடிக்கை எடுக்க உத்தரவிடுகிறேன்' என்று நீதிபதி கூறி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.